அடக்க ஒடுக்கமா இருந்தாலும் அள்ளுது!.. புடவையில் மனசை அள்ளும் பூஜா ஹெக்டே..

pooja
Pooja hedge: கர்நாடகா சொந்த மாநிலம் என்றாலும் மும்பையில் வளர்ந்தவர்தான் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட அதில் நுழைந்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அப்படியே நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, தமிழ மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டார். அந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படம் ஓடவில்லை. எனவே, தமிழ் சினிமாவில் அடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து நடிக்க துவங்கினார். 10 வருடங்களுக்கும் மேல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். ஒருகட்டத்தில் பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
இப்போது பாலிவுட்டில் எப்படியாவது நுழைய வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். முயற்சியில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்தார். தற்போது அடுத்த வாய்ப்புகளுக்கு வலை வீசி வருகிறார். இதற்காக அசத்தலான உடைகளில் அழகை காண்பித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டும் பூஜா திடீரென புடவை கட்டி அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருகிறார்.