ஒரு செருப்போட விலை இத்தனை லட்சமா? கேன்ஸ் விழாவில் கெத்து காட்டிய பீஸ்ட் நடிகை....!

by ராம் சுதன் |
pooja hegde
X

பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவிற்கு இந்திய நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். இவர் விழாவில் பங்கேற்றதைவிட விழாவிற்கு இவர் அணிந்து வந்த ஆடை மற்றும் ஆபரணங்கள் தான் தற்போது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

pooja hegde

அதன்படி கேன்ஸ் விழாவில் பங்கேற்ற பூஜா ஹெக்டே அணிந்திருந்த கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பின் விலை மட்டும் சுமார் ரூ.43 லட்சமாம். பூஜா ஹெக்டேவின் செருப்பு விலையை கேட்டு பலரும் அதிர்ச்சியில் மயங்கியே விட்டார்கள்.

ஏனெனில் அந்த செருப்பு விலையில் ஒரு சொகுசு காரே வாங்கி விடலாம். அந்த அளவிற்கு காஸ்ட்லியாக வாங்கும் அளவுக்கு அந்த செருப்பில் என்னதான் உள்ளது என பலரும் பூஜா ஹெக்டேவை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

pooja hegde

அதுமட்டும் இல்லைங்க பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடைகளும் லட்சக்கணக்கிலான மதிப்புடையது என கூறப்படுகிறது. கேன்ஸ் விழாவில் முதல் முறையாக பங்கேற்றதால் தான் பூஜா இவ்வளவு ஆடம்பரமாக உடை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.

Next Story