கடும் போட்டி.! பூஜாவா? புஷ்பாவா?! அந்த 6 பாட்டு யாருக்கு?

by Manikandan |
கடும் போட்டி.! பூஜாவா? புஷ்பாவா?! அந்த 6 பாட்டு யாருக்கு?
X

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14இல் திரைக்கு வர தீவிரமாக தயாராகி வருகிறது. அதற்கேற்றாற் போல, மற்ற பெரிய பான் இந்தியா படங்களும் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 14இல் இருந்து தள்ளி வைத்து வருகின்றன.

இதற்கடுத்ததாக விஜய் தனது 66வது திரைப்படத்திற்காக தெலுங்கு பட இயக்குனரை கமிட் செய்துள்ளார். வம்சி இயக்கும் இந்த படத்தை தெலுங்கு முன்னனி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

beast_main

இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு - தமிழ் என இரு மொழிபடமாக உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்க வைக்க முதலில் பாலிவுட் ஹீரோயின்கள் பேசப்பட்டனர்.

இதையும் படியுங்களேன் - இது வேண்டாத வேலை.! முக்கிய ஏரியாக்களை மொத்தமாக காப்பி அடித்த படக்குழு.!

dp-17

பின்னர் தெலுங்கு முன்னணி ஹீரோயின்களை கமிட் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளதாம். இப்படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே, புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ரேஸில் இருக்கின்றனராம்.

இதில் பூஜாவுக்கு தான் அதிக வாய்ப்பு என்கிறது படக்குழு. ஏனென்றால், பீஸ்ட் படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளதால் மீண்டும் அவர்களை அணுகலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம். விரைவில் தளபதி 66 பட ஹீரோயின் யார் எனஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story