Connect with us

Cinema History

இந்த படம் வேணாவே வேணாம்.. அடம் பிடித்த பூர்ணிமா பாக்கியராஜ்.. கடைசியில் நடந்தது தான் ட்விஸ்ட்டே!

Poornima Bhagyaraj: பிரபலங்களில் சிலர் கதையே கேட்காமல் இயக்குனரின் கேரியரை வைத்தே சிலவற்றை முடிவு செய்துவிடுவார்கள். அதனால் அவர்கள் சொல்லும் கதையை கூட கேட்காமல் நோ சொன்ன விஷயம் எல்லாம் நிறைய நடந்து இருக்கிறது. 

அப்படி ஒருவர் தான் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பூர்ணிமா பாக்கியராஜ் ரொம்பவே தயங்கி இருக்கிறார். முதலில் “நெஞ்சில் ஒரு முள்’, ‘கிளிஞ்சல்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களில் நடித்து முடித்து இருந்தார்.

இதையும் வாசிங்க:விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

இந்த சமயத்தில் அவருக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்கான வாய்ப்பு கிடைத்ததாம். இந்த வாய்ப்பு வாய் மொழியாக வந்த போதே தயங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் நிறைய முதல் பட இயக்குநர்கள் சொதப்பி இருந்தார்களாம். அறிமுக இயக்குனர்களே சரி இல்லை என்ற பேச்சுக்கள் திரையுலகத்தில் இருந்தது.

அதே மாதிரி இந்த படத்தின் வாய்ப்பு பூர்ணிமாவுக்கு வந்த செய்தி தெரிந்து நிறைய பிரபலங்களேஎ எந்த டைரக்டர்கள்கிட்டயும் அஸிஸ்டென்டா ஒர்க் பண்ணலையே. அவர நம்பி நடிச்சா கேரியர் போய்விடும் என மிரட்டல் தொனியில் சொல்லி இருக்கின்றனர்.

இதை கேட்ட பூர்ணிமா அந்தப் பட வாய்ப்பை தவிர்த்துக் கொண்டே இருந்து இருக்கிறார். ஒரு நாள் இயக்குனர் நான்கைந்து முறை போன் செய்தும் எடுக்காமலே இருந்து வந்தாராம். இதையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் அரசியலில் இருந்தாராம். 

அதனால் பூர்ணிவுக்கு அமைச்சர்களிடம் இருந்தும் சிபாரிசு வந்து இருக்கிறது. இத்தனை பேர் சொல்லியதால் கதையாவது கேக்கலாம்ன்னு நினைச்சு இயக்குநரைக் கூப்பிட்டு பேசி இருக்கிறார். பாம்குரோவ் ஹோட்டல்ல ஆர்.சுந்தர்ராஜன் கதை சொன்னாராம். 

இதையும் வாசிங்க:சிவாஜியே ”ப்ளாக் கோப்ரா” என அழைத்த அந்த நடிகர்..? வில்லனுக்கே பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்…

மொத்தக் கதையையும் மட்டுமல்லாமல் இடையில் வர பாடல்களையே பாடிக் காட்டி இருக்கிறார். அவரின் அந்த டெக்னிக்கில் பூர்ணிமா அசந்து விட்டார். இயக்குனருக்காக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே நினைக்காத அளவுக்கு அந்த படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. பூர்ணிமா திரை வாழ்க்கையே வேற லெவலில் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top