16 லட்சத்துடன் எடுக்கப்பட்ட பிக்பாஸ் பணப்பெட்டி… செம டீல் தான்!.. அம்மணி உஷாரு தான் போலயே!..
Biggboss Tamil: பிக்பாஸ் சீசனின் இந்த வார பணப்பெட்டி மூன்று நாட்களை கடந்து சென்று இருந்த நிலையில், 16 லட்சத்துடன் பெட்டி எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இன்னொரு ஆச்சரிய விஷயம் என்னவென்றால் இந்த போட்டியாளரை பல நாட்களை வெளியேற்ற ரசிகர்கள் திட்டமிட்டு வந்தனர்.
பிக்பாஸ் இந்த சீசன் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கினாலும் கூட பலருக்கு அது ஏமாற்றத்தை கொடுத்தது என்பது உண்மை தான். டாஸ்கே இல்லாமல் வெட்டி பேச்சை நம்பி மட்டுமே இந்த சீசன் கிட்டத்தட்ட இறுதியை நெருங்கி இருக்கிறது. அதனால் தான் என்னவோ வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இல்லை.
இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்
இதில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பை ரெட் கார்ட் கொடுக்க வைத்து வெளியேற்றிய கூட்டத்தையே மக்கள் வரிசையாக காலி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடைசி விக்கெட்டாக சமீபத்தில் விழுந்தது ரவீனா மற்றும் நிக்சன் தான். இதில் பூர்ணிமா மற்றும் மாயாவை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.
அது இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப்பெட்டி டாஸ்க் வந்தது 3 லட்சத்தில் தொடங்கி 9 லட்சம் வரை சென்று மீண்டும் இறங்கி இன்று காலை வரை 12 லட்சம் அதிகரித்து இருந்ததாம். இதற்கிடையில், மாயா, பூர்ணிமா உள்பட சில போட்டியாளர்கள் பெட்டி வந்தால் எடுத்து கொண்டு வெளியேற தயாராக இருந்தனர்.
இதையும் படிங்க: அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?
அதுப்போல, பூர்ணிமாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்து எமோஜியால் ட்வீட் செய்யப்பட்டு இருக்கிறது. இது உண்மையா இல்லையா என்பதை நாளை நடக்கும் லைவ்விலும், இரவில் ஒளிபரப்பாகும் எபிசோட்டிலும் காட்டப்படும் எனக் கூறப்படுகிறது.