Connect with us

Biggboss Tamil 7

பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்த இந்துஜா..! நெருங்கிய தோழியா இருந்துட்டு ஒரு பிக்பாஸுக்கு இத்தனை அக்கப்போரா..?

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், பட ப்ரோமோஷனுக்காக உள்ளே வந்த நடிகை இந்துஜா அவரின் நெருங்கிய தோழி பூர்ணிமாவை கண்டுக்காமல் போன சேதி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை பூர்ணிமா ரவி யூட்யூப்பில் அராத்தி என்ற வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர். இந்த சீசன் பிக்பாஸுக்குள் அவர் வரும் போது செமையாக கேம் ஆடப்போகிறார் என ரசிகர்கள் காத்து இருந்தனர். ஆனால் அவர் சேர்ந்த புல்லி கேங் அவர் இமேஜை மொத்தமாக காலி செய்தது.

இதையும் படிங்க: நீங்க அமைதியா இருக்கது தப்பு.. கார்த்திக்கு குட்டு வைத்த ’பருத்திவீரன்’ குட்டி சாக்கு…

இதில் ப்ரதீப் ஆண்டனிக்கு எதிராக சிகப்பு கொடி காட்டி வெறுப்பை மேலும் அதிகப்படுத்தி கொண்டார். இதனால் அவர் சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக கடைசி இடத்தில் இருந்தும் எலிமினேட் செய்யப்படாமல் பூர்ணிமா காப்பாற்றப்பட்டு வருகிறார்.

இதனால் அவர் யூ ட்யூப் மூலம் சம்பாரித்த ரசிகர்கள் கூட இப்போது அவருக்கு இல்லாமல் போனதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த கேங்கில் இருந்து வெளியான ஐஷு ஓபனாகவே தான் வெக்கப்படுவதாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து டேமேஜ் கண்ட்ரோல் செய்து கொண்டார். 

இந்நிலையில் பட ப்ரோமோஷனுக்காக பூர்ணிமா ரவியின் நெருங்கிய தோழியான இந்துஜா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். ஒரு விருது விழாவில் கூட இந்துஜா, தனக்கு நெருங்கிய தோழி என்பதை பூர்ணிமா சொல்லி இருப்பார். இதனால் இந்துஜா அவருக்கு எதுவும் அட்வைஸ் கொடுப்பார் என எண்ணப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் வந்த இந்துஜா பூர்ணிமாவுடன் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை.

இதையும் படிங்க: மாஸ் காட்டி வைரலான மீனா..! சைடு கேப்பில் காரியத்தினை சாதிக்க திட்டம் போட்ட விஜயா.. மீண்டும் ஆரம்பித்த ஸ்ருதி..!

சாதாரணமாக எல்லாரிடமும் பேசிவிட்டு வெளியேறினார். இதன் பின்னர் மாயாவிடம் அவ என்னோட க்ளோஸ் ப்ரண்ட் ஆனா என்கிட்ட சுத்தமா பேசவே இல்லை. நானா இருந்தா இப்படி இருக்கவே மாட்டேன் எனப் புலம்பி கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் இந்துஜா இன்ஸ்டாவில் பூர்ணிமாவை அன்பாலோ செய்துவிட்டார் என்ற ஸ்க்ரீன்ஷாட்டை தற்போது பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்ட்டாகி வருகின்றனர். இது கவினை வந்து ப்ரதீப் பார்க்கும் போது அடித்து இருப்பார். அதுப்போல ஒரு விளம்பர யுக்தியாக கூட இருக்கலாம் எனவும் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். அட பூர்ணிமா இந்த வாரமாவது வெளியேறுவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top