Categories: latest news tamil cinema gossips

ஷூட்டிங் வந்த இடத்துல காதலுடன் கசமுசா!.. கடுப்பான பிரபல நடிகர்.. ஹீரோயினையே மாத்த இதுதான் காரணமா?..

பிரபல நடிகரின் படம் வெளிநாட்டில் யாருக்கும் தெரியாமல் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சொல்லாமல் ரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தில் இணைந்த அந்த பிரியமான நடிகை திடீரென படத்தில் இருந்து முன்னதாக இயக்குனரையே தூக்கி எறிந்தது போல தூக்கி வீசிவிட்டாராம் அந்த பிரபல நடிகர் என செவி வழி செய்திகள் வைரலாகி வருகின்றன.

நடிகர் பல மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து நடிகர்கள் தேர்வாகும் போதே இயக்குநர் இவர் தான் இன்னொரு ஜோடி என நிறுத்தும் போது, நடிகருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.

இதையும் படிங்க: படம் கொலைவெறியா இருக்குன்னு வராம போயிடாதீங்க!.. குடும்பங்களை வரவழைக்க லியோ டீம் போட்ட செம பிளான்!..

அதிலும், சினிமா ஷூட்டிங்கிற்கு தனியாக போகாமல் தனது நீண்ட நாள் காதலரை அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் செலவில் சொகுசு ஹோட்டலில் ஜல்ஷா செய்தது நடிகர் காது வரை கசிந்து விட்டதாம்.

இந்த சாக்கு எனஃப் என நினைத்த நடிகர் உடனடியாக நடிகையை நீ உங்க வீட்டுக்கே போய் ரொமான்ஸ் பண்ணு ஆத்தா என திருப்பி அனுப்பி விட்டாராம். உடனடியாக இன்னொரு ஹாட்டான நடிகையை அந்த இடத்துக்கு தற்போது ரீப்ளேஸ் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தளபதி68க்கும் விடாமுயற்சிக்கும் இவ்ளோ ஒற்றுமையா? ரியல் போட்டி ஆரம்பிச்சிருச்சு! அடிமடியில கைவைக்காம இருந்தா சரி

ஹீரோயினை அதிரடியாக நடிகர் மாற்றியதை பார்த்து இயக்குனருக்கு அல்லே இல்லையாம். எங்கே நம்மையும் தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ என நடிகர் துரத்தி விடப்போகிறார் என நினைத்த இயக்குனர் விறுவிறுப்பாக வேலையை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

பெரிய நடிகருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு இப்படி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற கணக்காக மிஸ் ஆகிடுச்சே என அந்த நடிகை ஃபீல் செய்து வருகிறாராம்.

Published by
Saranya M