அடி மேல விழும் அடி!.. ஆடிப் போய் கிடக்கும் வி எழுத்து நடிகர்.. ஹாட்ரிக் தோல்வினா தாங்க முடியாதே!..

வி எழுத்து நடிகர் கடந்த இரு முறை துண்டு தவறி விழுந்த நிலையில், மூன்றாவது முறை மிஸ் ஆகாது என்கிற நம்பிக்கையுடன் ஒட்டுமொத்தமாக அந்த இயக்குநரை நம்பிய நிலையில், லுக் முதற்கொண்டு எதுவுமே அவருக்கு பிடிக்கும் அளவுக்கு ஃபைனல் அவுட்புட்டில் வரவில்லை என்பதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

மற்ற நடிகர்களுக்கு நல்ல படங்களை கொடுக்கும் இயக்குநர்களாக தேடி பொறுக்கி எடுத்து தனது பட வாய்ப்பை கொடுத்தால், நம்மள மட்டும் ஈஸியா தலையில் மிளகாய் அரைத்து விடுறாங்களே என ரொம்பவே மன வருத்தத்தில் உள்ளாராம்.

இதையும் படிங்க: இது உருட்டு இல்லை பாஸ் உண்மை!.. நெல்சன் அடுத்து அந்த பெரிய நடிகரை தான் இயக்கப் போறாராம்!..

நடிகரை நம்பி அந்த இயக்குநர் கேட்கும் அத்தனை பட்ஜெட்களையும் கொடுத்த தயாரிப்பாளர் கூடுதலாக பல கோடி செலவான நிலையில், தற்போது படத்தை பார்த்து விட்டு இதை எப்படி ஏமாற்றி பிசினஸ் பண்ணப் போகிறோம் என்கிற அப்செட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் முகத்தில் சிரிப்பே இல்லாமல் காணப்படுகிறாராம்.

பெரிய போட்டிகள் எல்லாம் நடிகருக்கு முன்பாக உள்ள நிலையில், முதலுக்கு மோசம் ஆகாமல் இருந்தாலே போதும் என்கிற மன நிலையுடன் இருக்கும் வி எழுத்து நடிகரை விடாது கருப்பு என்பது போல ஏகப்பட்ட பிரச்சனைகள் அவர் தும்முனாலும் துரத்திக் கொண்டு வந்து கட்டையை போடும் விதமாக இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தில் விஜயுடன் தொடங்கிய முதல் தகராறு… இயக்குனரை அசிங்கப்படுத்திய எஸ்.ஏ.சி..

சொந்த பிரச்சனை சோக பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, சினிமா பிரச்சனை அதை விட அவரை மனவேதனையில் வாட்டி வதைத்து வருகிறதாம். இயக்குநரை நம்பி ஆரம்பித்த படம் ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் ஒட்டுமொத்தமாக இறுதிக்கட்டத்தில் காணாமல் போக காரணமே இயக்குநருக்கு பிடித்தது போல அவர் உலகத்துக்குள் வி எழுத்து நடிகர் செல்ல முடியாது என ஆரம்பத்திலேயே போட்ட ஆர்டர் காரணமாக கடைசியில் பழி வாங்கி விட்டார் என்கின்றனர்.

எப்படியும் முன் கூட்டியே பில்டப்புகளை கொடுத்தாவது டிக்கெட்டு புக்கிங்கை நடத்தி விடலாம் என பார்த்தால், பல இடங்களில் பிசினஸ் ஆகாமலே இன்னமும் இருப்பதால் தான் படக்குழு டென்ஷனில் உள்ளது என்கின்றனர்.

 

Related Articles

Next Story