இது உருட்டு இல்லை பாஸ் உண்மை!.. நெல்சன் அடுத்து அந்த பெரிய நடிகரை தான் இயக்கப் போறாராம்!..

விஜய் டிவியில் பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கி சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்கலாம் என பார்த்த நிலையில், அந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை.

அடுத்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி டைரக்டர் ஆன நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. போஸ்டரே சும்மா மிரட்டுதே.. கமல்ஹாசனின் அந்த கிளாசிக் படம் மறுபடியும் ரீ ரிலீஸாகுது!..

100 கோடி வசூலை அந்த படம் எடுத்ததை பார்த்த தளபதி விஜய் அப்படியே நமக்கும் ஒரு டார்க் காமெடியை தட்டி விடுறது என வாய்ப்புக் கொடுக்க, ஒண்ணு ரெண்டு என்ன பாஸ் ஓராயிரம் பிட்டு போட்டு விடுறேன் என பீஸ்ட் படத்தைக் கொடுத்து டோட்டலாக வச்சு செஞ்சு விட்டார்.

ஆனாலும், அந்த படம் 200 கோடி பிசினஸ் பண்ண படமாக மாறியது. நெல்சனை பொறுத்தவரையில் அது ஏறுமுகம் தான் என்கிற நிலையில், அடுத்து ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பும் அல்வா போல கிடைக்க டபுள் டிக் அடித்து விட்டார்.

இதையும் படிங்க: 9வது நாளிலும் தெறிக்கவிடும் ஷாருக்கான்!.. அந்த மொட்டை தலை தான் ஹைலைட்.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை மட்டும் வைத்து இயக்காமல் ஒரே படத்தில் ஓஹோன்னு வாழ்க்கை என்பது போல மோகன்லால், சிவராஜ்குமார் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள சூப்பர்ஸ்டார்களை இயக்கும் ஜாக்பாட் அடிக்க ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் வேட்டையை நடத்தி நெல்சனை எங்கேயோ கூட்டிச் சென்று விட்டது.

இந்நிலையில், மீண்டும் விஜய் பக்கம் நெல்சன் வருவது கஷ்டம் என்கிற நிலையில், அடுத்து அஜித்தை தான் இயக்கப் போவதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கோடங்கி சமீபத்திய பேட்டியில் உறுதியாக கூறியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு நெல்சன் இயக்கத்தில் அஜித் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story