Connect with us

Cinema News

அடேங்கப்பா!.. போஸ்டரே சும்மா மிரட்டுதே.. கமல்ஹாசனின் அந்த கிளாசிக் படம் மறுபடியும் ரீ ரிலீஸாகுது!..

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ்  கமல் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், கிளாசிக் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரைப்பட இயக்குனரான சங்கீதம் சீனிவாசராவ் தமிழில் கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: 9வது நாளிலும் தெறிக்கவிடும் ஷாருக்கான்!.. அந்த மொட்டை தலை தான் ஹைலைட்.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த பேசும் படம் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு ரிலீசானது. சார்லி சாப்ளின் படங்களைப் போல எந்த ஒரு வசனமும் இன்றி முழுக்க முழுக்க கமல்ஹாசனின் நடிப்பால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து இழுத்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் பழம் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் புஷ்பக விமான எனும் பெயரில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் பேசும் படம் என வெளியானது. இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அமலா நடித்திருப்பார். சிறந்த பொழுதுபோக்கிற்கான தேசிய விருதினை இந்த படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரெட் கார்டு ஒரு பக்கம் இருக்கட்டும்!.. எனக்கு ஸ்ரீதேவி பொண்ணு தான் வேணும் என அடம்பிடிக்கும் அதர்வா?

இந்நிலையில், பேசும் படம் திரைப்படத்தை புத்தம் புதுப்பொலிவுடன் புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கி ராஜ்கமல் நிறுவனம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப் போவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. முன்னதாக, வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை டிஜிட்டல் மாஸ்டரிங் செய்து வெளியிட்ட நிலையில், அந்த பழத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பேசும் படம் திரைப்படம் அந்தக் காலத்திலேயே டாப் காமெடியில் மிரட்டிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக தியேட்டருக்கு இந்த படம் வந்தால் சினிமா ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என அனைவரும் பெரிய திரையில் இந்த படத்தை மிஸ் செய்ய மாட்டார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top