மனதளவில் அப்செட்டான வேர்ல்ட் நடிகர்!.. எல்லாத்துக்கும் காரணம் அந்த போட்டியாளரின் நண்பர் தானாம்!..

பல ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் வேர்ல்ட் நடிகருக்கு எந்தவொரு மரியாதை குறைவான செயலும் போட்டியாளர்களால் ஏற்படவில்லையாம். ஆனால், இந்த முறை நடிகரை பல முன்னாள் போட்டியாளரும் இப்படி டார்கெட் செய்யவும் நடிகரை பற்றி ஏளனமாக பேசவும் மறைமுகமாக டிவி சேனலுக்கு அந்த நடிகரை வெளியேற்ற வேண்டும் என்றே அழுத்தம் கொடுக்க அந்த நண்பர் நடிகர் தான் காரணம் என்கின்றனர்.

தனது நண்பனுக்கு தப்பான பட்டம் கட்டி வெளியே அடித்து துரத்திய நிலையில், ஆத்திரமடைந்த போட்டியாளரின் நண்பர் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி இளம் போட்டியாளர்களையும் டிவியை சேர்ந்த ஆட்கள் பலரையும் நடிகருக்கு எதிராக ஒன்று திரட்டி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் முதலில் திருமணம் செய்ய இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா? லண்டன் பொண்ணு சும்மா விடுமா என்ன?

பெரியளவில் அந்த நடிகருக்கு பிஆர் டீம் செட் செய்து வேலை பார்த்தும் தனது நண்பருக்கு வெற்றிக் கிடைக்காமல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஆதங்கத்தால் நடிகரை எந்தளவுக்கு டேமேஜ் பண்ண முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் பண்ணுகிற முடிவில் எல்லா வேலைகளையும் பார்த்து வருவது அந்த இளம் நடிகர் தான் என்கின்றனர்.

ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம் வேர்ல்டின் காதுகளுக்கு எட்டிவிட்டால் சினிமாவிலேயே அந்த இளம் நடிகர் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சிறப்பாக வச்சு செய்து விடுவார் என்கிற பயத்தின் காரணமாக அனைத்து வேலைகளையும் அவருக்கு எதிராக மறைமுகமாக அந்த நடிகர் செய்து வருகிறார் என கொளுத்திப் போட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சுத்தமா நடிக்கவே வரல!.. படிச்ச படிப்புக்கேத்த வேலையை பார்க்க கிளம்பிட்டாரா ஷங்கர் பொண்ணு?..

இதுவரை இல்லாத அளவுக்கு தன்னை டார்கெட் செய்து பலரும் அடிக்க நினைப்பதை அறிந்து அந்த வேர்ல்டே மனதளவில் கஷ்டப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து விலகி விடலாமா என்கிற முடிவுக்கே வந்து விட்டதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

 

Related Articles

Next Story