விஜய் முதலில் திருமணம் செய்ய இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா? லண்டன் பொண்ணு சும்மா விடுமா என்ன?

Vijay Marriage: தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய இந்த வளர்ச்சி யாரும் எளிதாக எட்டமுடியாத வளர்ச்சிதான். ஆரம்பகாலம் முதலே அப்பாவின் தூண்டுதலாலும் அறிவுரையாலும் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்தவர்.

அதன் பிறகு தொடர்ந்து பல நல்ல ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். சமீபகாலமாக விஜய் படங்கள் என்றாலே அது ஆக்‌ஷன் படம்தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இதையும் படிங்க: தீபாவளி முடிந்தும் கெத்து காட்டும் விஜய்… லியோவுக்கு அடிச்ச லக்!.. திடீரென நடந்த டிவிஸ்ட்!..

ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு வசூல் மன்னனாக முடிசூடா மன்னராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜயின் சொந்த வாழ்க்கையை பற்றி பிரபல் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

விஜய் சங்கீதா என்ற லண்டனை சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் நடித்த படங்களை பார்த்து ஈர்க்கப்பட்டவராம் சங்கீதா. ஒரு சமயம் சங்கீதாவும் அவரது அக்காவும் விஜயை பார்க்க நேராக விஜய் வீட்டிற்கே வந்து விட்டதாக விஜயின் தாய் ஷோபா ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: லியோவை விட பயங்கரமா இருக்கே? அடுத்த பட போஸ்டரை வெளியிட்டு மிரள வைத்த சாண்டி

ஆனால் முதலில் விஜய் திருமணம் செய்ய இருந்தது வேறொரு பெண்ணைத்தானாம். அவருடைய சொந்த தாய்மாமனான சுரேந்தரின் மகளையாம். சுரேந்தர் பிரபல பாடகர். மைக் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.

விஜயின் அம்மாவின் சொந்தத் தம்பி. அவருடைய மகளைத்தான் திருமணம் செய்ய இருந்தாராம். ஆனால் அதற்குள் சங்கீதாவை காதலித்ததால் மாமன் மகளை கைவிட நேர்ந்ததாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரு பக்கா மாஸ் கதை!.. அந்த படத்தை தாண்டணும்!.. அட்லீ சொல்றத கேளுங்க!..

 

Related Articles

Next Story