லியோவை விட பயங்கரமா இருக்கே? அடுத்த பட போஸ்டரை வெளியிட்டு மிரள வைத்த சாண்டி

Sandy Master: சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மக்களிடையே பிரபலமானவர் சாண்டி. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிதான் சாண்டிக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருந்தது. குருநாதா, குருநாதா என பிக்பாஸை சாண்டி அழைக்கும் விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

டைட்டில் வின்னர் வரை சென்று சும்மா கெத்து காட்டினார் சாண்டி. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இருந்தாலும் அவரால் நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. அதன்பிறகு விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக தன் வேலையை தொடங்கினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரு பக்கா மாஸ் கதை!.. அந்த படத்தை தாண்டணும்!.. அட்லீ சொல்றத கேளுங்க!..

அதன் மூலம் மிகவும் பிரபலமானார். விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு கமலை ஆட வைத்ததன் மூலம் இன்னும் மக்களின் பேராதரவை பெற்றார் சாண்டி மாஸ்டர். அதன் விளைவுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சாண்டி நடிக்க உதவியாக இருந்தது.

அந்தப் படத்தில் வில்லனாக நடித்து முதல் ஷார்ட்டிலேயே அனைவரையும் மிரள வைத்தார் சாண்டி. அதுவும் காஃபி. காஃபி என சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார் சாண்டி. இந்த நிலையில் இன்று அவரின் கன்னட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: தனுஷுக்கு கிடைக்காத வாய்ப்பு அதர்வாவுக்கு கிடைச்சிருச்சே! ஹாலிவுட் வரை போயும் ஒரு யூஸும் இல்லயே?

ஆண்டாள் என்ற கேரக்டரில் திரு நங்கையாக நடிக்கும் அந்த கன்னட பட போஸ்டரை லோகேஷ்தான் இன்று வெளியிட்டிருக்கிறார். போஸ்டரிலேயே சும்மா பயத்தை காட்டியிருக்கிறார் சாண்டி. ஒரு பெரிய கேங்ஸ்டர் படமாக தயாராக உள்ள இந்த படத்திற்கு ரோஸி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சாண்டி தனது கன்னட அறிமுகத்தை பதிவு செய்கிறார்.

 

Related Articles

Next Story