தனுஷுக்கு கிடைக்காத வாய்ப்பு அதர்வாவுக்கு கிடைச்சிருச்சே! ஹாலிவுட் வரை போயும் ஒரு யூஸும் இல்லயே?
Dhanush: தமிழ் திரையுலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் தனது 50வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி , ஹாலிவுட் என உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக தனுஷ் விளங்குகிறார். தனுஷ் படங்கள் என்றாலே துள்ளிக் குதித்து ஓடி நடிக்க வரும் நடிகைகள் ஏராளம்.
இதையும் படிங்க: போச்சே.. போச்சே!.. விசித்ராவுக்கும் டைட்டில் கிடைக்காது போல!.. பிரதீப் பத்தி இப்படி சொல்லிட்டாங்களே!..
ஆனால் தனுஷுடன் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் இதுவரை நடிக்க விருப்பம் காட்டாமலேயே இருந்துவந்தார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் மீது என்ன கோவமோ தெரியவில்லை போனி கபூருக்கு.
தனுஷ் படம் என்றாலே வேண்டாம் என சொல்லி விடுகிறாராம். ஆனால் அவருக்கு குஷி கபூர் என்ற இன்னொரு மகளும் இருக்கிறார். அவர் இப்போது தமிழ் சினிமாவில் முதன் முறையாக காலெடி எடுத்து வைக்கிறார். அதுவும் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகிறாராம் குஷி கபூர்.
இதையும் படிங்க: பூவ வைக்க வேற இடக்கலயா செல்லம்!. தர்ஷாவை பாத்து கிறங்கும் நெட்டிசன்கள்!..
ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் ஜூனியர் என்.டி. ஆருக்கு ஜோடி சேர்ந்த குஷி கபூர் தமிழில் முதன் முறையாக அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் விக்னேஷ் சிவன் உதவியாளரான ஆகாஷ் இயக்கத்தில் தான் இந்தப் படம் தயாராக இருக்கிறதாம்.
மேலும் இந்தப் படத்தை காவிர் மருத்துவமனைக்கு வேண்டப்பட்ட ஒருவர்தான் தயாரிக்க இருக்கிறாராம். அவரின் செல்வாக்கை அறிந்து கூட போனிகபூர் தன் மகளை இந்த படத்தில் நடிக்க அனுமதி அளித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் வழியில் சூர்யா! ‘கங்குவா’ திரைப்படத்திற்காக இப்படி ஒரு மாற்றமா? – திடீர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
COPYRIGHT 2024
Powered By Blinkcms