Connect with us
gangu

Cinema News

அஜித் வழியில் சூர்யா! ‘கங்குவா’ திரைப்படத்திற்காக இப்படி ஒரு மாற்றமா? – திடீர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Ganguva Movie: தமிழ் திரையுலகில் சூர்யா ஒரு மதிப்பு மிக்க நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தொடர்ந்து பல மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மக்கள் மத்தியில் அறியப்படுகிறார் சூர்யா.

இவருடைய இந்த வளர்ச்சி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தாலும் அவரது அப்பாவான சிவக்குமாருக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சிதான். அந்தளவுக்கு நடிப்பின் மீதே ஆர்வம் இல்லாதவராகத்தான் சூர்யா இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி 68: வாலை சுருட்டிக்கொண்டு படமெடுக்கும் வெங்கட் பிரபு!.. காரணம் அதுதானாம்!..

நடிப்பு வராது. ஒழுங்கா வசனம் பேசவும் தெரியாது. நடனமும்  ஆட வராது. இப்படி இருக்கும் ஒருத்தரால் எப்படி சினிமாவில் சாதிக்க முடியும் என்ற சந்தேகத்திலேயே தனது மகனை சினிமா பக்கம் தலைகாட்டாமல்தான் வைத்திருந்தாராம் சிவக்குமார்.

ஆனால் விதி யாரை விட்டது. ஒரு படம் சூர்யாவின் தலையெழுத்தையே மாற்றி விட்டது. நேருக்கு நேர் திரைப்படம் சூர்யா நடித்த முதல் திரைப்படம். முதல் படத்திலேயே சாக்லேட் பாயாக அடையாளப்படுத்திக் கொண்டார் சூர்யா.

தொடர்ந்து காதல் கதைகளை மைய்ப்படுத்தி இருக்கும் படங்களில் நடித்து பெண்களின் இதயங்களை கவர்ந்தார். நந்தா திரைப்படம்தான் சூர்யாவை ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிய திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: வேற வழி தெரியல ஆத்தா! படத்த ரிலீஸ் செய்ய இதான் ஒரே வழி – ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

அதுமட்டுமில்லாமல் விதவிதமான கெட்டப்களை போடுவதற்கும் அடித்தளமாக அமைந்த படமாகவும் நந்தா படம் அமைந்தது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா.

இந்த படத்தை சிறுத்தை சிவாதான் இயக்குகிறார். கிட்டத்தட்ட 10 மொழிகளில் தயாராகும் இந்த கங்குவா திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை பற்றிய ஒரு அப்டேட் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

எப்பொழுதும் அஜித் பட ரிலீஸூக்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட் அமைந்திருக்கும். அவர் பெரும்பாலும் வியாழக்கிழமைகளில்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என விரும்புவார். அதே ஒரு கொள்கையைத்தான் இப்போது சூர்யாவும் பின்பற்றுகிறாராம்.

இதையும் படிங்க: காலை வாரிய ஜப்பான்!.. அதிரடியாக ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்துக்கு ஜம்ப்பான கார்த்தி?

கங்குவா திரைப்படம் ஏப்ரல் 11 வியாழக்கிழமை அன்றுதான் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். ஏற்கனவே தமிழ் புத்தாண்டு தினத்தில் வரிசைக் கட்டிக் கொண்டிருக்கும் படங்களில் மத்தியில் மூன்று நாள்களுக்கு முன்பாகவே கர்சீப்பை போட்டு இடம்பிடித்து விட்டனர் கங்குவா படக்குழு.

google news
Continue Reading

More in Cinema News

To Top