வேற வழி தெரியல ஆத்தா! படத்த ரிலீஸ் செய்ய இதான் ஒரே வழி - ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

Dhuruva Natchathiram: விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரமோடு இணைந்து ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது. 70 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சில பல பணப் பிரச்சினைகளால் படம் வெளியிடாமலேயே இருந்தது. இந்தப் பணப் பிரச்சினையை போக்குவதற்காக கௌதம் மேனன் ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்!. சிறையில் இருக்கும்போதே சொன்ன எம்.ஆர்.ராதா!..

அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வைத்து துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பணப்பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். ஒரு வழியாக இந்தப் படம் 24 ஆம் தேதி உறுதியாக வெளிவரும் என்று சொல்லபடுகிறது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவிக்கு பட நிறுவனம் விற்றிருப்பதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் கலைஞர் டிவிக்கா என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இல்லாத படத்துக்கு ஓவர் ஆசைப்பட்ட ஸ்ரீகாந்த்.. பல்ப் கொடுத்த மணிரத்னம்… ஆனா அந்த படம் மாஸ் ஹிட்டாம்..!

வேறு ஒரு நல்ல பெரிய நிறுவனத்திற்கு விற்றிருந்தால் கூட இன்னும் படம் பெரிய அளவில் ரீச் ஆக வாய்ப்பிருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இருந்தாலும் துருவ நட்சத்திரம் வெளியாவதற்கு உண்டான கடைசி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் சொன்ன தேதியில் படம் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. முதல் பாகத்திற்கே இந்தளவுக்கு சோதனையை சம்பாதித்த படக்குழு இரண்டாம் பாகத்திற்கு இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கோ என்றும் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோ வாய்ப்பை இழந்த நடிகர்களுக்கு எல்சியூவில் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்… எக்கசக்க ஸ்பெஷலாம்..!

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it