Thalapathy 68: சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் என்றாலே படப்பிடிப்பில் மிகவும் சீரியஸாக இருப்பார்கள். முகத்தை கடுகடுவென வைத்திருப்பார்கள்.. வேலை சரியாக நடக்கவில்லை எனில் கோபத்தில் உதவியாளர்கள் உட்பட எல்லோரையும் திட்டுவார்கள் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால், இதற்கு நேர்மாறானவர் வெங்கட்பிரபு. நண்பர்களை சேர்த்துக்கொண்டு மிகவும் ஜாலியாக படமெடுப்பார். இவர் படங்களில் நடிப்பவர்களும் பெரும்பாலும் இவர்களின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். இவர் முதலில் இயக்கிய சென்னை 28, சரோஜா ஆகிய படங்களை பார்த்தலே வெங்கட்பிரபு எவ்வளவு ஜாலியான நபர் என்பது என்பது நமக்கு தெரியும்.
இதையும் படிங்க: வேற வழி தெரியல ஆத்தா! படத்த ரிலீஸ் செய்ய இதான் ஒரே வழி – ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
அதோடு, படப்பிடிப்பு 6 மணிக்கு முடிந்தவுடன் நண்பர்களுடன் ஜாலியாக பார்ட்டி பண்ண போய்விடுவார். இதுதான் அவரின் வழக்கம்.இப்போது விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. வழக்கத்திற்கு மாறாக தனது வாலை மொத்தமாக சுருட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறாராம் வெங்கட்பிரபு.
அதிகமாக பார்ட்டி பண்ணுவதில்லையாம். மேலும், அடிக்கடி கேரவான் சென்று நேரத்தை வீணடிக்காமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே இருக்கிறாராம். அதற்கு காரணம் விஜய்தான். விஜயை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அதை சரியாக செய்ய வேண்டும்.. கண்டிப்பாக படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என உழைத்து வருகிறாராம். அதோடு, தன்னை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் கருங்காலி மாலையும் அணிந்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: காலை வாரிய ஜப்பான்!.. அதிரடியாக ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்துக்கு ஜம்ப்பான கார்த்தி?
ஒருபக்கம், இந்த படம் பற்றி எந்த அப்டேட்டையும் வெளியே சொல்லக்கூடாது என விஜய் சொல்லிவிட்டதால் அதையும் அவரால் செய்ய முடியவில்லை. ஆனாலும், சினிசியாரிட்டாக வேலை பார்த்து வருகிறார். இது விஜயின் 68வது திரைப்படமாகும். மேலும், இப்படத்தில் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், சினேகா என பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜ இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிப்பு தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, பாங்காக் என பல நாடுகளிலும் எடுக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..