போச்சே.. போச்சே!.. விசித்ராவுக்கும் டைட்டில் கிடைக்காது போல!.. பிரதீப் பத்தி இப்படி சொல்லிட்டாங்களே!..

0
296

பிரதீப் ஆண்டனிக்காக பரிந்து பேசி அவரது ரசிகர்களை விசித்ரா அள்ளியிருந்த நிலையில், கடந்த வாரம் கமல்ஹாசன் மண்டையை கழுவி விட்ட நிலையில், தற்போது மாயாவுடன் இணைந்து கொண்டு பிரதீப் பற்றி படுமோசமாக விசித்ரா பேசிய வீடியோ காட்சிகளை பிரதீப் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிரதீப் மனநலம் சரியில்லாதவன் என்றும் அவனை வெளியே அனுப்பினால் வெளியே உள்ளவர்கள் நிலைமை மோசமாகி விடும் என்றும் வெளியே சென்றும் ஏதாவது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் என்ன ஆவது என்கிற அக்கறையினால் தான் அவனை வீட்டில் இருக்க நினைத்தேன் என்றும் மத்தபடி அவன் மீது எனக்கு எந்த பாசமும் இல்லை என்றும் பிரதீப் ஆண்டனி படுமோசமானவன் என மாயாவிடம் விசித்ரா விவகாரமாக பேசியது பெரிய பின் விளைவுகளை அவருக்கு கொடுக்கப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

இதையும் படிங்க: தளபதி 68: வாலை சுருட்டிக்கொண்டு படமெடுக்கும் வெங்கட் பிரபு!.. காரணம் அதுதானாம்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு சாதகமாக விஜே அர்ச்சனா மற்றும் விசித்ரா பேசிய நிலையில், அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற விசித்ரா அதிக ஓட்டுக்களுடன் முதல் ஆளாக சேவ் ஆகப் போவதாக கூறுகின்றனர். இந்நிலையில், பிரதீப்பை பற்றி படுமோசமாக விசித்ரா பேசியதை பார்த்த ரசிகர்கள் அடுத்த வாரம் நாமினேஷன் வாம்மா வீட்டுக்கே அனுப்பிடுறோம் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காலை வாரிய ஜப்பான்!.. அதிரடியாக ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்துக்கு ஜம்ப்பான கார்த்தி?

விசித்ராவை டேமேஜ் செய்து கீழே இறக்கி விட்டு டைட்டிலை தட்டித் தூக்க மாயா பக்காவாக பிளான் போட்டு விளையாடி வருகிறார் என்றும் இந்த சீசனில் அவர் தான் வெல்லப் போகிறார் என்றும் இப்படியொரு மோசமான ஷோவை பார்த்ததே கிடையாது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

google news