அஜித்தின் ரோல் மாடலே இவர்தானாம்.. இப்பதான் தெரியுது ஏன் தல இப்படி இருக்காருனு?

by Rohini |   ( Updated:2024-04-27 09:57:01  )
ajith
X

ajith

Actor Ajith: கோலிவுட்டின் மிகவும் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வரும் அஜித் அவருடைய பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுவது பைக், ரேஸ் கார் ரேஸ், ரைபிள் சுடுதல் போன்றவைதான். சினிமாவை தாண்டி இந்த பொழுதுபோக்கு அம்சங்களை தான் அஜீத் அதிகமாகவே விரும்புகிறார்.

படப்பிடிப்பின் போதும் விடுமுறை காலங்களில் ஓய்வெடுக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுவது தான் அவருடைய விருப்பமாக கருதப்படுகிறது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ‘குட் பேட் அக்லி ’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மார்க் ஆண்டனி என்ற மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு ஆதிக் இயக்கும் படம் குட் பேட் அக்லி என்பதால் அதுவும் அஜித்தை வைத்து இயக்கப் போவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் ஹீரோயின்… ஒன்னு இல்ல இரண்டு… மியூசிக்கில கோட்டைய விட்ராதீங்கப்பா!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க அஜித் ரசிகர்களுடன் உரையாடுவது சந்திப்பது பொது விழாக்களில் கலந்து கொள்வது என எதையுமே அவர் விரும்புவதில்லை. அதே போல் ரசிகர்கள் தன்னைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் என்றைக்குமே நினைத்ததில்லை, ஒரு தனித்துவமான மனிதராகவே அஜீத் இதுவரை தமிழ் திரையுலகில் காணப்படுகிறார்,

senna

senna

இந்த நிலையில் அஜித்தின் ஒரு பழைய பேட்டி சோசியல் மீடியாவில் உலா வருகின்றது. அதில் அஜித்திடம் ரசிகர் ஒருவர் உங்களின் ரோல் மாடல் யார் என்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அஜித் தன்னுடைய ரோல் மாடல் பிரபல கார் ரேஸர் ஆன ‘ஆரிடன் செனான்’ என்பவரை கூறியிருக்கிறார். அவர் ரேஸர் என்பதையும் தாண்டி ஒரு தனித்துவமான மனிதர், தத்துவ சிந்தனைகள் கொண்ட மனிதர், அவருடைய எந்த பேட்டியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு ஆழமான உள் கருத்துக்கள் இருக்கும். அதனாலேயே அவரை எனக்கு பிடிக்கும். அதனால் தான் என்னுடைய ரோல் மாடலாக ஆரிடன் செனானை நினைத்திருக்கிறேன் என அஜித் கூறினார்.

இதையும் படிங்க: பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே வடிவேலுதான்!.. என்னப்பா சொல்றீங்க!..

Next Story