சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?

by Akhilan |   ( Updated:2023-11-02 05:32:13  )
சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?
X

Sivaji vs MGR: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தலைமுறையிலும் இருக்கும் நடிகர்கள் எப்போதுமே நடிப்பில் போட்டி போட்டு பட்டையை கிளப்புவார்கள். இப்போது விஜய், அஜித், முன்னாடி கமல், ரஜினி என்றால் 60-களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தான்.

அவர்களை இயக்கிய இயக்குனர்கள் கூட இருவரையுமே இயக்க தான் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவையே தன்னுடைய இயக்கத்தால் புரட்டி போட்ட கே.பாலசந்தர் ஒரு படத்தில் கூட எம்.ஜி.ஆரை இயக்கவே இல்லையாம்.

இதையும் வாசிங்க:‘தங்கலான்’ படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை லீக் செய்த விக்ரம்! சோன முத்தா போச்சா?

அதிலும் அவர் நடித்து கொண்டு இருந்த போதே இவர் சினிமாவில் உயர தொடங்கிவிட்டார். ஆனால் சிவாஜியை வைத்து எதிரொலி என்ற ஒரு படத்தினை மட்டும் இயக்கி இருந்தார். இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில் தான் ஏன் எம்.ஜி.ஆரை இயக்கவில்லை என்பதற்கு பதில் அளித்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, ரஜினிகாந்த், கமலையே ஒரு கட்டத்தில் இயக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். நான் தயாரித்தால் கூட எஸ்.பி.முத்துராமன் தான் இயக்கி இருந்தார். ஒரு நடிகராக மற்ற இயக்குனர்கள் இயக்கும் போது எதிர்பார்ப்பார்கள். ஆனால் நான் இயக்கினால் என்னை வைத்து வேறு விஷயத்தினை எதிர்பார்ப்பார்கள்.

இதையும் வாசிங்க:நம்பியாரை பார்த்து சிரித்த சிவாஜி.. ரூமுக்கு போயிட்டு வந்து முறைத்தாராம்.. இது என்ன கதையா இருக்கு..!

அது படத்தைப் பாதிக்கும் என்பதால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டேன். அதுவே எம்.ஜி.ஆர். ஒரு இமயம். ஆனால் சிவாஜியை வைத்து இயக்கிய எதிரொலி திரைப்படத்தின் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது. சிவாஜிகணேசன் செய்த ஒரு தவறுக்கு குற்ற உணர்வில் தவிப்பது தான் கதையாக இருக்கும். மனசாட்சியால் அவரை கடைசி வரை இம்சித்து கொண்டே இருக்கும்.

ஆனால் சிவாஜியின் பெரிய இமேஜ் அந்த படத்துக்கு பிரச்னையாக இருந்தது. மாஸ் ஹீரோ தப்பு செய்வாரா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. இதுவே புதுமுகம் வைத்து எடுத்து இருந்தால் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும். சிவாஜியின் இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இதனால் தான் பெரிய இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என முடிவெடுத்தாக குறிப்பிட்டார்.

Next Story