சந்தானத்தைப் கட்டிப் பிடிச்சி அப்படியா சொல்லிக் கொடுத்தாரு டி.ஆர்.?… பிரபலம் சொல்றதைப் பாருங்க…

by sankaran v |
santhanam. trajendar
X

santhanam. trajendar

தமிழ்த்திரை உலகில் ஒரு சகலகலாவல்ல டைரக்டர் யாருன்னு கேட்டா டி.ஆர்.னு சொல்லலாம். இவரைப் பற்றி பல விசேஷ தகவல்களை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். அதுல ஒண்ணுதான் இது. பார்க்கலாமா…

டி.ராஜேந்தர் பெண்களைத் தொடவே மாட்டாரு. இதுவரை அவர் எந்த நடிகையையும் தொட்டதே கிடையாது. அவரது சுண்டுவிரல் கூட பட்டதே கிடையாது. அவர் பார்க்கத்தான் கரடு முரடா இருப்பாரு. ஒரு உதவின்னு கேட்டா கண்டிப்பா உதவுவாரு.

ஒரு தயாரிப்பாளர் சம்பளத்துல பாக்கி வச்சிட்டா நெருக்கடி கொடுக்க மாட்டாரு. இப்ப இதே குணம் சிம்புவுக்கு இருக்கு. இன்று பலருக்கும் மறைமுகமா உதவி செஞ்சிக்கிட்டு இருக்காரு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

சந்தானம் ஒரு காணொளில சொன்ன விஷயம்தான் இது. ஒரு நீச்சல் குளம் காட்சி. நார்த் இந்தியன் ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அணைத்து முத்தம் கொடுக்குற காட்சியை டி.ராஜேந்தர் சொல்லிக் கொடுக்கிறாரு. அப்போ டி.ஆர். டேய் கட்டிப்பிடின்னு அந்த ஹீரோக்கிட்ட சொல்ல அவரோ கொஞ்சம் கூச்சப்பட்டுருப்பாரு போல. சரியா செய்யாம இருந்துருக்காரு.

டி.ஆர். எவ்வளவோ சொல்லியும் கேட்காம சரியா பர்பார்மன்ஸ் பண்ணல. உடனே நீச்சல்குளத்துலயே குதிச்சி நீச்சல் அடிச்சி அந்தப் பக்கம் எழுந்து அந்த ஹீரோவைப் பளார் பளார்னு அறைஞ்சாராம். சந்தானத்தைக் கூட்டி வந்து அவரைக் கட்டிப்பிடிச்சி நடிச்சி அப்படி செய்யணும். இப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுத்தாராம். சந்தானத்தைக் கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்காத குறைதானாம். அவரு பொம்பளையவே தொட மாட்டாருல்ல. அதனால தான் சந்தானத்தை வச்சி அந்த சீனை சொல்லிக் கொடுத்தாராம் என்றும் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Next Story