Cinema News
சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட பிரபாஸ்.. கல்கி 2898 ஏடி படத்துக்கு டோட்டலாக குறைந்த எதிர்பார்ப்பு?
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்த மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 31-ஆம் தேதி கல்கி படத்தின் அனிமேஷன் வெர்ஷன் ஆன புஜ்ஜி அண்ட் பைரவா அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதை பார்த்து விட்டு ரசிகர்கள் கல்கி படத்துக்காக வெறித்தனமாக காத்திருப்பார்கள் என படக்குனு நினைத்த நிலையில், முதலுக்கே மோசம் என்கிற நிலைமைக்கு தற்போது கல்கி படத்தை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மொத்தமாக குறைந்து விட்டதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 13 படங்களில் நடித்தும் புதுமுகம்னு சொல்லி பிரபுவுடன் ஜோடி சேர்ந்த நடிகை! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்
தோர் ரக்னோரக் படத்தில் வருவது போன்ற காட்சிகள் தான் அந்த அனிமேஷன் வெப்சீரிஸில் உள்ளதாகவும், வெறும் 2 எபிசோடுகளை மட்டும் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாகவும் பிரபாஸின் கதாபாத்திர டிசைன் சரியாக காட்டாமல் அந்த புஜ்ஜி கார் உருவாக்கப்பட்ட காட்சிகளை மட்டுமே காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுவும் பெரிதாக எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லை என்றும் 2896வது வருஷத்தில் உலகம் ஏன் அப்படி ஆனது, யார் வில்லன் பிரபாஸ் அப்படியொரு புஜ்ஜி காரை உருவாக்க என்ன காரணம்? அந்த புஜ்ஜி எனும் ஏஐ தொழில்நுட்பம் எப்படி உருவாக்கப்பட்டது என எந்தவொரு டீட்டெய்லையும் நாக் அஸ்வின் சொல்லாமல் வெறும் குழந்தைகளை கவரும் விதமாக காமெடியாகவே அந்த காட்சிகள் நகர்வதால் இளைஞர்கள் மத்தியில் பெரிதாக ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது என்கின்றனர். மேலும், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகாமல் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது தமிழ்நாட்டில் கல்கி படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தையை பெத்த பின்பும் அழகு குறையலையே!.. சோப்பு நுரையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை!..
கல்கி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஜூன் 5-ஆம் தேதி பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக கூறுகின்றனர். அந்த படத்தின் டிரைலருக்கு பிறகுதான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்றும் பிரபாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் படங்கள் பில்டப் செய்த அளவுக்கு அவுட்புட் கொடுக்குமா என்பது ரசிகர்கள் மத்தியில் கடைசிவரை சந்தேகத்தையே கிளப்பி வருகிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் படங்கள் அதிரடியாக வசூல் வேட்டையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேட்டையன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லையா? என்னடா இது புதுக்கதையா இருக்கு..!