Categories: latest news

பிரபாஸோட 500 கோடி பட்ஜெட் படத்துக்கு இப்படியொரு ஆப்பா?.. அந்த படத்தோட அட்டுக் காப்பின்னு சொல்றாங்க!

ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து எடுப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி கல்கி திரைப்படம் வெளியாக போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியே ஹாலிவுட் படமான டூன் படம் போல கல்கி இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 100 கோடி வசூல் செய்த மார்க் ஆண்டனி!.. 10 கோடியாவது ரத்னம் வசூல் செய்யுமா?.. 3 நாள் வசூல் எவ்வளவு?..

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர் தான் நாக் அஸ்வின். நடிகையர் திலகம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. நடிகை சாவித்திரியின் பயோபிக் படமாக உருவான அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் வென்றார்.

அதன் பின்னர் பல ஆண்டுகள் பெரும் முயற்சி செய்து பிரபாஸை வைத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக கல்கி படத்தை உருவாக்கி வருகிறார் நாக் அஸ்வின். வரும் ஜூன் மாதம் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அது முழுக்க முழுக்க டூன் படத்தின் காப்பி தான் என தீபிகா படுகோன் லுக், படத்தின் விஷுவல்ஸ் உள்ளிட்டவற்றை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ராமரின் அவதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால் அந்த படத்தில் ராமாயணத்தை தவறாக சித்தரித்து விட்டனர் என பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்த படம் 300 கோடி வருஷம் கூட பெறாமல் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்கிற பெயரில் மகாபாரதத்தில் இடம்பெற்ற அஸ்வத்தாமாவை எல்லாம் உருவாக்கியுள்ளனர். புராணத்துக்கு எதிராக படத்தின் கதை அமைந்து விட்டால் அதுவும் பெரிய தலைவலியாக பிரபாஸ் படத்துக்கு மாறிவிடும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்… அடுத்த வில்லன் யார் தெரியுமா?..

இந்நிலையில், ஹாலிவுட் படத்தின் காப்பி என வைரலாகும் ட்ரோல் அந்த படத்தின் பிசினஸில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ஆர்ஆர் படம் போல வெளிநாடுகளில் விருதுகளை இந்த படம் வெல்லுமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

7 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

10 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago