கமல் மூஞ்சு என்ன இப்படி வெந்து போய் கிடக்குது!.. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ஜந்து மாதிரி இருக்காரே!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் டிரெய்லர் தற்போது முதற்கட்டமாக தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. தமிழில் இந்த முறை பிரபாஸ் படத்தை கண்டுக்கவே இல்லை என்றே தெரிகிறது. சமீபத்தில் வெளியான புஜ்ஜி அண்ட் பைரவா அனிமேஷன் தொடரும் தெலுங்கு மற்றும் இந்தியில் தான் வெளியானது.

ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த கல்கி படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், அதில், கமல்ஹாசன் காட்சியை காண காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி, சோபனா உள்ளிட்ட பலரையும் முழுமையாக காட்டிய நிலையில், கமல் வரும் காட்சி வாம்மா மின்னல் கணக்கில் ஒரே ஒரு செகண்ட் வந்து செல்கிறது.

இதையும் படிங்க: இனிமே லேட் பண்ணா பட்டை நாமம் தான்!.. முன்னாடியே சீட் போட்ட தனுஷ்!.. ராயன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஆனால், அதிலும் கமல்ஹாசன் முகத் தோற்றம் முழுமையாகவோ மாஸாகவோ இல்லை. லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தில் வரும் வித்தியாசமான ஜந்து போல முகமெல்லாம் வெந்து கண் முழி மட்டும் வெளியில் பிதுங்கி பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார் உலகநாயகன். டிரெய்லரில் வந்த அந்த ஒரு சில நொடி காட்சிகளை போலவே படத்திலும் வருவாரா? என தெரியவில்லை.

பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் பல தலைகளுடன் சைஃப் அலி கான் வந்தது போல இந்த படத்தில் திடீரென 3 முகத்தை காட்டும் காட்சிகள் ரசிகர்களை லைட்டாக படத்தின் மீதான பயத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு களம் இறங்கும் 5 திரைப்படங்கள்!.. வேகமாக துண்டை போட்ட விடுதலை 2 டீம்!..

ஹாலிவுட் படம் அளவுக்கு உழைப்பை கொட்டி படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் நல்லாவே உருவாக்கியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் வரும் காட்சிகள் உயிர்ப்புடனும் பிரபாஸ் வரும் காட்சிகளில் அதிகப்படியான சிஜி இருப்பது போன்ற தோற்றம் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் பெரிதாக புதுமையாக இல்லை. பல ஸ்டார் வார்ஸ் படங்களில் பார்த்து பழகிப் போன காட்சிகள் போலவே உள்ளன.

இந்த மாதம் ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ள கல்கி படத்தின் டிரெய்லர் வெளியாகும் முன்னதாகவே நார்த் அமெரிக்காவில் இந்த படம் 500 ஆயிரம் டாலர்கள் டிக்கெட் முன் பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். கல்கி திரைப்படம் கமல் நடித்தாலும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்தாலும் நாக் அஸ்வின் நடிகையர் திலகம் படத்துக்கு தமிழில் கொடுத்த முக்கியத்துவம் அளவுக்கு இந்த முறை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!…

 

Related Articles

Next Story