பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் மாருதி இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் போஸ்டர் மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் உள்ளிட்ட பல அப்டேட்கள் வரிசையாக ரசிகர்களுக்காக வர காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: தமிழ் அகராதியிலேயே இல்ல! செல்போனுக்கு இப்படி ஒரு பொருள் இருக்கா? இலக்கியவாதிகளை திணறடித்த தனுஷ்
இந்நிலையில், எல்லாத்துக்கும் முன்னாடி பிரபாஸ் நானும் என் ஃபேன்ஸுக்கு சூப்பர் அப்டேட் கொடுக்கிறேன் பாருங்க என காலையிலேயே மாஸ் காட்டி உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. இந்நிலையில், அடுத்து கல்கி திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கப் போகும் படத்துக்கு ராஜாசாப் என பவர்ஃபுல் டைட்டில் வைத்துள்ளனர். மேலும், கலர்ஃபுல் லுங்கியை கட்டிக் கொண்டு பட்டாபட்டி தெரியும் அளவுக்கு அதை தூக்கிக் கொண்டு படுஜோராகவும் ஜாலியாகவும் பிரபாஸ் கொடுத்துள்ள போஸ் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: என்ன செல்லம் இப்படி மாறிட்ட!.. பாதி கிழிச்ச டிரெஸ்ல பலான போஸ் தந்த சீரியல் நடிகை…
இதுவரை இறுக்கமான முகத்துடன் அடிதடி நாயகனாகவே இருந்து வந்த பிரபாஸ் இந்த படத்தில் மாளவிகா மோகனனுடன் இணைந்து தரலோக்கலாக டான்ஸ் எல்லாம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கப் போகிறார் என தெரிகிறது.
இந்த படமும் பான் இந்தியா படமாகவே உருவாக உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சலார் வெற்றியைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி, மாருதி இயக்கத்தில் ராஜாசாப் என ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார் பிரபாஸ்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…