Cinema News
பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..
கல்கி படத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்து போன கமல்ஹாசனுக்கு 150 கோடி சம்பளம் எனக் கூறியது எல்லாம் மிகப்பெரிய உருட்டு என்றே கூறுகின்றனர். 20 முதல் 30 கோடி ரூபாய் தான் கமல்ஹாசனுக்கு கல்கி 2898 ஏடி படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர்.
அந்த படத்தின் ஹீரோ பிரபாஸுக்கே 80 கோடி ரூபாய் தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனுக்கான சம்பளமும் 20 கோடி ரூபாய்க்குள் தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கல்கி படத்தில் பிரபாஸ் சம்பளம் என்ன இவ்வளவு குறைவாக இருக்கு என்று பார்த்தால், படத்தை ஹாலிவுட் தரத்துக்கு பண்ண செலவு பண்ணுங்க என பிரபாஸ் சொல்லி விட்டாராம்.
இதையும் படிங்க: இதுக்கு மேல நடிச்சு என்ன பண்ணப் போறாரு? அவரெல்லாம் ஒரு தலைவரா? ரஜினியை விளாசிய இயக்குனர்
தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு 200 கோடி, 250 கோடின்னு விஜய் வாங்கினாலும் அவருடைய படங்கள் இன்னமும் பான் இந்தியா ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாகவில்லை. படத்தின் மொத்த பட்ஜெட்டே 300 கோடி தான். அதில், விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி என்றால் படம் எப்படி குவாலிட்டியாக உருவாகும் எனக் கேட்கின்றனர்.
கோட் படத்தில் இளம் விஜய்யை காட்ட டீஏஜிங் எல்லாம் செய்யப்பட்டாலும் அதை பார்த்தால் விஜய் போலவே இல்லை என்றே விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. படத்திற்கான சம்பளத்தை அதிகம் வாங்காமல், புரொடக்ஷனுக்கு செலவு பண்ணினால் தான் ஹாலிவுட் தரத்துக்கு படம் பண்ண முடியும் என்றும் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளியானது தளபதி 69 பட அறிவிப்பு!. இசையமைப்பாளர் யார் தெரியுமா?!…
அந்த வகையில் பிரபாஸிடம் இருந்து விஜய் மட்டுமில்லை கோலிவுட்டில் இருக்கும் பல முன்னணி நடிகர்களும் பாடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித்துக்கு விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் வெறும் ரோட்டில் நடந்து வரும் போஸ்டரை வெளியிடுகின்றனர்.
ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு புதிதாக இசையமைக்காமல் இளையராஜா இசையை பயன்படுத்தி அவரிடம் இருந்து நோட்டீஸ் வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்களே இந்த நிலைமையில் இருந்தால் மற்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனக் கேட்கின்றனர்.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதியில் குழப்பமா? லைக்காவின் அமைதிக்கான காரணம் என்ன? தாத்தா வருவாரா?