More
Categories: Cinema News latest news

பாகுபலி ரேஞ்சுக்கெல்லாம் இப்போ பிரபாஸ் கனவு காணவே முடியாது!.. தமிழ்நாட்டுல சலார் சேல் ஆகலயாம்!..

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் தமிழ் சினிமா படங்களை விட அப்போது பல மடங்கு அதிக வசூல் ஈட்டியது. பாகுபலி வசூலை முறியடிக்க தமிழ் சினிமாவுக்கு பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஆனால் தற்போது நிலைமை அப்படி எல்லாம் கிடையாது என்கின்றனர்.

தெலங்கானாவில் மட்டுமே பிரபாஸின் சலார் படத்துக்கு வரவேற்பு உள்ளது என்றும் மற்ற மாநிலங்களில் படத்துக்கான முன்பதிவு மிகவும் குறைவாக உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
Advertising

இதையும் படிங்க: எங்க செல்லம் பாதி டிரெஸ்ஸ காணோம்!.. தூக்கலா காட்டி தூங்கவிடாம பண்னும் ரேஷ்மா..

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் 23 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு மட்டும் தான் வியாபாரம் நடந்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் கேரளாவில் அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் நடந்து இருப்பதாக கூறுகின்றனர்.

இதில் பெரிய சோகம் என்னவென்றால், இயக்குனர் பிரசாந்த் நீலின் சொந்த ஊரான கர்நாடகாவில் வெறும் 50 லட்சத்துக்கு மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் பிசினஸ் நடைபெற்றுள்ளதாகவும் ஹிந்தி பெல்ட்டில் அதிகபட்சமாக 2.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் புக்கிங் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: அந்த தலைப்பே வேணாம்!. ஹெச்.வினோத்துக்கு கட்டையை போட்ட கமல்.. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிங்கப்பா!…

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முதல் நாள் 30 முதல் 40 கோடி தான் சலார் படம் வசூல் செய்யும் என்றும் ஓவர்சிஸ் வசூலும் இந்த முறை பிரபாஸுக்கு மிகப்பெரிய சரிவை உண்டாக்கி இருப்பதாக கூறுகின்றனர். ஏனென்றால், வெளிநாடுகளில் அதிகபட்சமாக ஷாருக்கானின் டங்கி திரைப்படம் முந்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து சலார் வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்றால் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தை விட படம் தரமான சம்பவமாக இருக்க வேண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Published by
Saranya M