More
Categories: Cinema News latest news

இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..

ஹாலிவுட்டில் வெளியான ஸ்டார் வார்ஸ், டூன் படங்களைப் பார்த்து ரொம்பவே இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார் போல இயக்குனர் நாக் அஸ்வின். கடந்த சில ஆண்டுகளாக ஒரு டயரை உருட்டிக் கொண்டிருந்ததன் பின்னணியில் இந்த புஜ்ஜி காரைத்தான் உருவாக்கி உள்ளனர்.

ஜகமே தந்திரம் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த புஜ்ஜி பாடலிலிருந்து புஜ்ஜி என்கிற வார்த்தையை சுட்டு இப்படி ஒரு காரை கல்கி படத்துக்காக நாக் அஸ்வின் உருவாக்கி உள்ளாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஈரமான ரோஜாவாக மாறிய செந்தூரப்பூவே சீரியல் நடிகை!.. கன்ட்ரோல் பண்ணவே முடியாது இப்படி பார்த்தா!..

கீர்த்தி சுரேஷ் வைத்து நடிகையர் திலகம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியவர் நாக் அஸ்வின். அடுத்ததாக பிரபாஸை வைத்து அவர் உருவாக்கிய கல்கி திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக காத்திருக்கிறது. அந்தப் படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் இல்லாமல் எப்படி கல்கி படத்தை உருவாக்குவது என நினைத்த நாக் அஸ்வின் புஜ்ஜி காருக்கு வாய்ஸ் கொடுக்கும் வேலையை கீர்த்தி சுரேஷ்க்கு கொடுத்துவிட்டார். அந்த காரை தற்போது பிரம்மாண்ட விழா நடத்தி முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். புஜ்ஜி காரை ஓட்டிக்கொண்டு நடிகர் பிரபாஸ் நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ராமராஜனின் தலைமுடியைப் பார்த்து கமல் அடித்த கிண்டல்… மனுஷன் குசும்புக்காரரா இருப்பாரோ?!

புஜ்ஜி கார் நிச்சயமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் என பிரபாஸ் கூறியுள்ளார். புஜ்ஜி காரை பார்த்தால் ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் வாகனத்தைப் போலவே உள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் படத்தைப் போல கல்கி படமும் சொதப்பி விட்டால் பிரபாஸுக்கு மிகப்பெரிய அடியாக விழும் என்று கூறுகின்றனர். சலார் திரைப்படம் 700 கோடி வசூலை பெற்ற நிலையில், இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் புஷ்பா 2வை விட கல்கி படம் தான் இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய படமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷாரூக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உடம்பில் இப்படி ஒரு பிரச்சினையா?

Published by
Saranya M

Recent Posts