உனக்கு சம்பளம் ஒரு கேடா.?! அசிங்கப்பட்ட பிரபுதேவா.! வித்தியாசமான பழிக்கு பழி சம்பவம்…

Published on: June 26, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாடுபவராக அறிமுகமாகி அதன் பின்னர், நடன அமைப்பாளராக மாறி அதன் பின்னர் நடிகர் தற்போது கோலிவுட் , பாலிவுட் இயக்குனர் என கலக்கி கொண்டு இருக்கிறார் பிரபு தேவா.

இவர் அவ்வப்போது நடிப்புக்கு பிரேக் எடுத்து இயக்க வருவார். பின்னர் இயக்கத்துக்கு பிரேக் எடுத்து நடிக்க வருவார். சில சமயம் நட்புக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து கொடுப்பார் இப்படி பன்முகம் கொண்ட பிரபு தேவா ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை கடந்து வந்துள்ளார்.

அவர் ஆரம்ப காலகட்டத்தில் நடன இயக்குனராக இருந்த போது அவருக்கு ஒதுக்கப்பட்ட சம்பளத்தை ஒரு தயாரிப்பாளர் சரியாக கொடுக்கவில்லையாம். அந்த சமயம். சம்பளத்தை வாங்க அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளார் பிரபு தேவா.

உடனே, அந்த தயாரிப்பளார் கடுப்பாகி, நீ செஞ்ச வேலைக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா என கேட்டு , அவர் நடனம் அமைத்த ரீல் பெட்டிகளை அவரிடமே கொடுத்துவிட்டார். மன வேதனையுடன் பிரபு தேவா அதனை எடுக்காமல் அப்படியே வந்துவிட்டாராம்.

இதையும் படியுங்களேன்  – இயக்குனர் பா.ரஞ்சித்தின் பின்னணியில் கோடிக்கணக்கான சிங்கப்பூர் பணம்.. பகீர் கிளப்பும் பின்னணி…

பின்னர், படம் ரிலீசாக அந்த பாட்டுக்காகவே படம் தாறு மாறு ஹிட். உடனே அடுத்த படத்திற்க்கு மீண்டும் பிரபு தேவாவை அந்த தயாரிப்பாளர் அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார். ஆனால், மற்றவர்களை விட 4 மடங்கு சம்பளம் அதிகமாக கொடுத்தால் நான் நடனம் அமைத்து கொடுக்கிறேன் என பிரபுதேவா கூறவே, ஆடிப்போய்விட்டராம் அந்த தயாரிப்பாளர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.