ஷூட்டிங்கிற்கு வந்தும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த பிரபு… அப்படி என்ன நடந்தது தெரியுமா?

Published on: February 8, 2023
Prabhu
---Advertisement---

1997 ஆம் ஆண்டு பிரபு, நக்மா, கவுண்டமணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பெரிய தம்பி”. இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

Periya Thambi
Periya Thambi

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

“பெரிய தம்பி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் காலை 6 மணிக்கு ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர். ஆனால் அத்திரைப்படத்தின் கதாநாயகி 7 மணிக்கு வந்தாராம். ஆதலால் நக்மாவிடம் “என்னம்மா இவ்வளவு லேட் ஆ வர்ரீங்க” என கடிந்துகொண்டாராம்.

Nagma
Nagma

மேலும் இன்று படமாக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை எப்படி திட்டமிட்டப்படி படமாக்குவது என்று டென்ஷனில் இருந்தாராம் இயக்குனர். அப்போது பிரபு படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்துள்ளார். இயக்குனரின் முகம் டென்ஷனில் கடுகடு என இருந்ததை பிரபு பார்த்துக்கொண்டே இருந்தாராம்.

Chitra Lakshmanan
Chitra Lakshmanan

சரியாக பத்தாவது நிமிடத்தில் இயக்குனர் அருகில் சென்று அவரிடம் “உங்க முகமே சரியில்லையே, நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?” என கேட்டாராம். அதற்கு பிரபு, “அதெல்லாம் ஒன்னுமில்லை பிரபு” என்று கூற, “பண பிரச்சனை எதாவது இருக்கா, தயவு செஞ்சு சொல்லுங்க, நான் பணத்துக்கு ரெடி பண்றேன்” என கூறினாராம்.

Prabhu
Prabhu

அதற்கு இயக்குனர் “எந்த பிரச்சனையும் இல்லை பிரபு” என கூறியிருக்கிறார். எனினும் பிரபு விடாமல், “நீங்க என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தான் நான் நடிப்பேன். இல்லைன்னா நான் இந்த படத்துல நடிக்க மாட்டேன்” என்று அடம்பிடித்தாராம். அதன் பிறகுதான் இயக்குனர், நடிகை தாமதமாக வந்ததால் இன்றைய காட்சிகளை திட்டமிட்டப்படி எடுக்கமுடியுமா என்று டென்ஷனாக இருப்பதாக கூறினாராம். அதன் பின் பிரபு, அவரை தேற்றிவிட்டுச் சென்றாராம். இவ்வாறு இயக்குனர்களின் மீது மிகுந்த அன்புடன் பழகும் நபராக இருந்திருக்கிறார் பிரபு.

 

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.