Jananayagan: பிரபுதேவா சொல்லியும் கேட்கல! ஜனநாயகன் விழாவில் சொதப்பிய பிரபலம்

Published on: January 1, 2026
prabhu (1)
---Advertisement---

கடந்த மாதம் 27 ஆம் தேதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. விஜயின் கடைசி படம் என்பதால் அந்த விழாவை காண ஏராளமான பேர் கலந்து கொண்டனர். பல நாடுகளில் இருந்தும் விஜயை பார்க்க ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இசை வெளியீட்டு விழா மட்டுமல்ல அது ஒரு பெரிய கச்சேரியாகவும் அமைந்தது.

விஜய் நடித்த படங்களில் இருந்து சில குறிப்பிட்ட படங்களில் உள்ள பாடல்களை பாடகர்கள் பாட ஒரு பிரம்மாண்டமான கச்சேரியாகவே அது மாறியது. திரையுலகில் இருக்கும் பல பாடகர்கள் அந்த விழாவில் கூடினர். ஜனநாயகன்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரும் விஜய்க்காக பல பாடல்களை பாடினார். ஆரம்ப காலங்களில் இருந்து விஜயுடன் பின்னாடி குரூப் டான்ஸராக ஆடிய டான்ஸ் மாஸ்டர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ட்ரிபுயூட்டாக விஜய் முன்பு விஜய் நடித்த பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள்.

அது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதில் கடைசியாக பிரபுதேவாவின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பாபா பாஸ்கர், நோபில், ஜானி, ஸ்ரீதர் என பல மாஸ்டர்கள் ஒன்று சேர்ந்து நடனம் ஆடினர். முதலில் பிரபதேவா மட்டும் தான் நடனமாட வேண்டியதாக இருந்ததாம். அதன் பிறகு பிரபு தேவாவின் ஐடியாவின் பேரில் தான் அனைவரும் சேர்ந்து ஆடினால் என்ன என்று பிரபுதேவா சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு தான் சாண்டி மாஸ்டரில் இருந்து எல்லோரும் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்கள். அதில் பிரபு தேவா, மாஸ்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருந்தாராம். ஒவ்வொரு டான்ஸ் மாஸ்டராக சென்று விஜய்க்கு லெட்டர் கொடுத்து வர வேண்டும். இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட்டு திரும்ப வேண்டும். இல்லையென்றால் டைமிங் மிஸ் ஆகிவிடும்.

அதை விட்டுவிட்டு உங்கள் இஷ்டத்துக்கு எதையாவது செய்து சொதப்பி விட்டுறாதீங்க என்று பிரபுதேவா கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி பாபா மாஸ்டர் லெட்டரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் விஜயின் கால் அருகில் கீழே உட்கார்ந்து விஜயின் கைக்கு முத்தம் கொடுத்து விட்டு திரும்புவார். பாபா மாஸ்டர் இப்படி பண்ணுவார் என்று தெரிந்து தான் பிரபுதேவா அப்படி ஒரு அறிவுரையை கூறி இருக்கிறார். ஆனால் அதையும் மீறி பாபா மாஸ்டர் இப்படி செய்தார். ஆனால் அவர் இந்த மாதிரி ஏதாவது சொதப்புவார் என எங்களுக்கு தெரியும் என இந்த சம்பவத்தை பற்றி கல்யாண் மாஸ்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.