வடிவேலுவை நான் மனுஷனா பார்த்ததே இல்லை!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பிரபுதேவா!..

by Akhilan |   ( Updated:2023-11-05 05:26:19  )
வடிவேலுவை நான் மனுஷனா பார்த்ததே இல்லை!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பிரபுதேவா!..
X

PrabhuDeva: தமிழ் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகள் ரசிகர்களிடம் அப்ளாஸ் அதிகமாகவே வாங்குவார்கள். அந்த லிஸ்ட்டில் முக்கியமானவர்கள் பிரபுதேவாவும், வடிவேலுவும் தான். இன்னும் இருவரும் வரும் காமெடி காட்சிகள் வைரலாகவே இருக்கிறது.

இருவரும் இணைந்து நடித்த மனதை திருடிவிட்டாய், காதலா காதலா, மிஸ்டர் ரோமியோ, ராசையா, காதலன் ஆகிய 5 படங்களுமே மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. இதில் இருவரும் இணைந்து செய்த காமெடி ஒவ்வொன்னுமே ரசிகர்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு அமைந்து இருக்கும். மேலும், பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் வடிவேல் செய்த காமெடி அவரின் ஹலைட்களில் ஒன்று.

இதையும் படிங்க: சந்திரமுகி 2-வை அடுத்து லால்சலாம்!.. கடும் அப்செட்டில் ஐஸ்வர்யா.. என்ன நடந்துச்சி தெரியுமா?…

இந்நிலையில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பிரபுதேவா தனக்கும் வடிவேலுவுக்குமான நட்பு குறித்து மனம் திறந்து இருக்கிறார். நான் எப்போதுமே வடிவேலுவை மனுஷனா பார்க்கவே மாட்டேன். அவரை பார்க்கும் போது எனக்கு ஒரு கார்ட்டூன் கேரக்டரை பார்ப்பது போல தான் இருக்கும். அவர் செய்யும் சின்ன சைகைகள் கூட எனக்கு அப்படி தான் தோணும்.

மேலும், அவரை நான் இம்சை செய்து கொண்டே இருப்பேன். சட்டையை இழுப்பேன். கிள்ளுவேன். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டார். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன என்று கேட்டால் கூட அவன் தானே விளையாடுறான் எனக் கூறிவிட்டு அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க: டைட்டிலில் சொந்த பெயரை கூட போட முடியாத சோகம்!.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக வந்த காமெடி நடிகர்!..

ஒருமுறை அவர் மீது தண்ணியை கூட ஊத்தி இருக்கேன். இப்படி சின்ன சின்ன சேட்டைகளை செய்து கொண்டே இருப்பேன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தினை பார்த்தேன். தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். வடிவேலு உக்காந்தாலே அது காமெடிதான். ஆனால் அதை உடைத்து எனக்கு அவர் மீதான இமேஜை மாற்றினார்.

சில மாதங்களுக்கு முன்பு அவருடன் நான் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலானது. சிங் இன் தி ரெயின் பாடலை நான் சொன்னதுமே பாடினார். என்னிடம் ரொம்ப பாசமாகவே இருப்பார். ஆனால் அவர் உயரம் ரொம்பவே அதிகம். எங்களுக்குள் பரஸ்பரம் அன்பு இருக்கும் எனத் தெரிவித்தார்.

Next Story