Cinema History
தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
Prabhudeva: சினிமாவின் பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா ஒரு படத்தில் நடிகர் தனுஷின் போட்ட கண்டிஷன் குறித்து நகைச்சுவையாக பேசியிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தன்னுடைய இளம் வயதிலிருந்து கோலிவுட்டில் டான்ஸ் ஆடி கலக்கி வருபவர் பிரபுதேவா. நடனத்தில் மிகப்பெரிய புகழைப் பெற்றாலும் நடிப்பிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்பட்டார்.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..
ஹீரோவாக நடித்து வந்த பிரபுதேவா தற்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த கோட் திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று ஆச்சரியப்படுத்தினார். சினிமாவில் இப்படி ஒரு துறையில் வளர்ந்து வந்தாலும் பிரபுதேவாவின் நடனம் எங்குமே மாறவில்லை.
தன்னுடைய படங்களில் வித்தியாசமான நடன அசைவுகளால் ரசிகர்களை கட்டி போடுபவர் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார். அப்படி பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடம் இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடனமாடிய மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் இன்றளவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் பாடல் என்பதுதான் உண்மை. இந்த பாடலுக்கு பிரபுதேவா இசையமைக்க வேண்டும் என நடிகர் தனுஷ் அதிகமாக விரும்பினாராம்.
இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.
இதைத் தொடர்ந்து பிரபுதேவாவை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ் மாஸ்டர் எனக்கு ஒரு பாடலில் நீங்கள் கோரியோகிராப் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். பிரபுதேவாவும் என்ன பாடல் என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாராம்.
ஆனால் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தற்போதையெல்லாம் செட் போடாமல் டீக்கடையில், தெருக்களில் ஆடி சமாளித்து விடுகின்றனர். தெலுங்கு சினிமா போல் பலபலக்கும் செட்டுகளை போட வேண்டும். நான் கேட்பதை சரியாக செய்து கொடுத்தால் தான் பணிபுரிவேன் என பிரபுதேவா கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
அதற்கு நடிகர் தனுஷ் நீங்கள் வந்தால் மட்டும் போதும் என்ன சொன்னாலும் ஒத்துக் கொள்கிறோம் என உடனே ஒப்புக்கொண்டாராம். இதைத்தொடர்ந்தே ரவுடி பேபி பாடலின் நடிகர் பிரபுதேவா கோரியோகிராப் செய்ய பாடலும் படு ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.