Cinema News
நானும் விஜயும் ஃபிரண்டா? என்ன மைக்கேல் ஜாக்சன்? தளபதி 68ல் நடிக்கிறீங்க! – இப்படி சொல்லிட்டீங்க?
PrabhuDeva talk about Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று அந்தப் படத்தின் வெற்றிவிழாவை மிகவும் கோலாகலமாக படக்குழு கொண்டாட இருக்கிறார்கள்.
நேரு உள்விளையாட்டரங்கில்தான் படத்திற்கான வெற்றிவிழா நடக்க இருக்கிறது. விஜய் என்ன மாதிரியான பேச்சு கொடுக்க இருக்கிறார் என்பதை பார்க்க தமிழ் நாட்டில் இருக்கும் அவரது ரசிகர்கள் இன்று படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஓவரா எதிர்பார்த்து ஒன்னும் இல்லன்னா செஞ்சிருவாங்க!.. லியோ பார்த்து அலார்ட் ஆன ரஞ்சித்!..
லியோ படத்தை முடித்த கையோடு விஜய் அடுத்ததாக அவருடைய 68வது படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாகி விட்டார், படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு ஒரு சாங் மற்றும் சண்டைக் காட்சிகளும் முடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறது. தளபதி 68 படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா சமீபத்தில் ஒரு பேட்டியின் போது விஜயை பற்றியும் தளபதி 68 படத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க: கோடியை மட்டும் சுருட்ட தெரியுது! எங்க நிலைமையையும் யோசிங்க நயன் – பரிதவிக்கும் படக்குழு
அதாவது முதல் சாங்கில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், விஜய் ஆகியோர் இணைந்து ஆடியிருப்பதாக பிரபுதேவா கூறினார். அந்த சாங் காட்சிகளைத்தான் படமாக்கியிருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் திரையுலகில் எனக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் படி யாரும் இல்லை என்றும்,
எல்லாமே பள்ளி பருவ தோழர்கள்தான் என்றும் கூறினார். விஜயுடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் என செய்திகள் வருகிறதே? அப்போ அது நட்பு இல்லையா? என்ற கேள்விக்கு இல்ல, இல்ல. அப்படி எல்லாம் இல்லை. ஒரு படத்தில் நடிக்கிறோம் என்றால் அதுவரைக்கும் நல்லா பழகுவோம். அதன் பிறகு அவர் பிஸியாகிவிடுவார். அதுவும் விஜய் இப்பொழுது அடைந்திருக்கும் இடமே வேற என்று பிரபுதேவா கூறினார்.
இதையும் படிங்க: எங்களுக்கு கோமணம்… அவருக்கு மட்டும் ஷாட்ர்ட்ஸா?… இயக்குனரை வெளுத்து வாங்கிய விக்ரம்…