15 வயதில் கமலுக்கே நடனம் சொல்லிக்கொடுத்த பிரபுதேவா!.. அட அப்பவே அவர் அதுல கிங்!...

by சிவா |
prabudeva
X

Prabudeva: திரையுலகில் 70,80களில் பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்தவர் சுந்தரம். இவருக்கு மூன்று மகன்கள். இதில் ஒருவர்தான் பிரபுதேவா. மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் சுந்தரம் நடனமைத்த ‘பனி விழும் இரவு’ பாடலில் ஒரு ஒரு காட்சியில் வருவார். அப்போது சிறுவனாக இருப்பார்.

அப்போதே அப்பா வேலை செய்த படங்களில் உடன் செல்வாராம். காலத்தின் கோலம் தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாட துவங்கினார். சிக்கு புக்கு ரயிலே, ராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குது... லாலாக்கு டோல் டப்பிமா.. போன்ற பாடல்களில் நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதையும் படிங்க: வடிவேலுவை நான் மனுஷனா பார்த்ததே இல்லை!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பிரபுதேவா!..

இந்து என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஷங்கர் இவரை தனது காதலன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். அதன்பின் முழுநேர நடிகராக மாறினார். அதேநேரம் அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களுக்கு நடனமும் அமைப்பார். பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைத்தனர்.

ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறி விஜய் நடித்த போக்கிரி உட்பட பல படங்களை இயக்கியிருக்கிறார். ஹிந்திக்கு போய் சல்மான் கானை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார். இப்படி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களையும் பிரபுதேவா எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருட்டு கதையில் நடித்து திணறிய பிரபுதேவா..! கடைசியில் சூப்பர்ஸ்டார் உதவியால் எஸ்கேப் ஆன சம்பவம்..!

இவர் 15 வயதிலேயே கமலுக்கு நடனம் சொல்லி கொடுத்தவர் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால், உண்மையில் அது நடந்தது. அவரின் அப்பா நடனம் அமைத்த படம்தான் கமல் நடித்த வெற்றிவிழா. இந்த படம் வெளிவந்த போது பிரபுதேவாவுக்கு வயது 15. இந்த படத்தில் கமலும், டிஸ்கோ சாந்தியும் நடனம் ஆடுவது போல் ஒரு பாடல் வரும்.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் பிரபுதேவாதான். அவரின் அப்பா வரமுடியாமல் போனதால் பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இது பற்றி பேசிய பிரபுதேவா ‘ எனக்கு எந்த பயமும் இல்லை. கமல் சார் போல ஒரு பெரிய நடிகருக்கு நடனம் அமைக்கிறோம் என்று கூட அப்போது எனக்கு தெரியாது. என் உலகம் நடனம் மட்டுமே. அதில் மட்டுமே நான் இருந்தேன்’ என பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: பாதியிலேயே விட்டுப் போன அஜித்! அதுல நான் நடிப்பதா? உதறித்தள்ளிய பிரபுதேவா – படமோ சூப்பர் ஹிட்

Next Story