அது ஃபேக்!.. பிரதீப் ஆண்டனி சோஷியல் மீடியா ஐடின்னு ஃபயர் விடாதீங்க.. எல்லாமே போலியாம்?..

by Saranya M |
அது ஃபேக்!.. பிரதீப் ஆண்டனி சோஷியல் மீடியா ஐடின்னு ஃபயர் விடாதீங்க.. எல்லாமே போலியாம்?..
X

பிக் பாஸ் சீசன் 7ல் இருந்து எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி பெயரில் உள்ள சமூக வலைதள கணக்கு போலி என பிரதீப் ஆண்டனி தெரிவித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கூடவே மைலேஜ் ஏற்றும் வகையில் கமல் கொடுத்த தீர்ப்பு தப்பானது என அவருக்கே ஆப்பு அடித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் அசீம் போலவே அனைவரிடமும் சண்டைப் போட்டு டைட்டில் வின்னர் ஆகிவிடலாம் என கான்ஃபிடன்ட் ஆக இருந்த பிரதீப் ஆண்டனி வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் நிக்சன் உடன் இணைந்து போட்ட ஸ்ட்ராட்டஜியால் வெளியேற்றப்பட்டார்.

பெண் போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா உள்ளிட்டோர் தங்களுக்கு பிரதீப் ஆண்டனியால் ஆபத்து என்றும் அவர் தப்பாக பார்க்கிறார், தப்பான செய்கைகளை செய்கிறார். அவர் ஒரு சரியான பொம்பள பொறுக்கி என்கிற அளவுக்கு புகார் அளித்து அவரது பெயரை டேமேஜ் செய்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க: அஜித்தே சூட்டிங் போய்டாப்ல! உனக்கு என்ன தலைவா? கைவிடப்பட்டதா சிம்புவின் ப்ராஜக்ட்?

கமல்ஹாசனும் வாரம் முழுவதும் நிகழ்ச்சியை கண்காணித்து பிரதீப் ஆண்டனியின் நடவடிக்கை சரியில்லை என்றும் பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் வீட்டிலும் நாட்டிலும் தான் அதைத்தான் முன்னெடுப்பேன் என அரசியலையும் வழக்கம் போல் பேசியிருந்தார்.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு பல ட்வீட்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு உண்மையா? அல்லது போலியா? என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் உள்ள ஒரிஜினல் ஐடியில் கேட்க, அது ஃபேக் என பிரதீப் ஆண்டனி கூறியுள்ளார்.

Next Story