போடு இதுதான் ஒரிஜினல் தீபாவளியே! பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Pradeep is come back: பிக்பாஸின் இந்த சீசன் இதுவரை இல்லாத அளவுக்கு சூடுபிடித்திருக்கின்றது. உள்ளே இருக்கும் புள்ளிங்கோ கும்பல் தெரிந்து செய்கிறார்களா? இல்லை தெரியாமல் செய்கிறார்களா? என்று தெரியவில்லை. அதிலும் மாயாவின் தலைமையில் பிக்பாஸ் வீடு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.

உலகெங்கிலும் உள்ள பிக்பாஸ் ரசிகர்கள் இந்த புள்ளிங்கோ குரூப் மீது பெரும் கோவத்தில் இருக்கிறார்கள். வரும் கமல் எபிசோடில் இவர்களை கண்டிப்பாக கமல் கேள்வி கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் செய்வது எல்லாம் ஜோக். ஆனால் மற்றவர்கள் செய்தால் அது அபத்தம். இது என்ன நியாயம்?

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை மீறி திருமணம் செய்து வைத்த ஜெயலலிதா!.. பொன்மன செம்மலுக்கு வந்த கோபம்!.

பிரதீப் செய்தது தவறில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அவர் வெளியேறியதற்கு சொல்லப்பட்ட காரணம் தான் தவறு என்று மக்கள் கூறுகிறார்கள். இதெல்லாம் விட ஒரு வார்னிங் கார்டு கொடுத்து கமலோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனமோ பிரதீப்பையும் அவர் மீது புகார் செய்த புள்ளிங்கோ குருப்பையும் தனிப்பட்ட முறையில் தீர விசாரித்து அதன் பின் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கலாம்.

ஆனால் கடந்த மூன்று நாள்களாக அர்ச்சனா மற்றும் விசித்ராவின் வாய்ஸ் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் புள்ளிங்கோ டீம் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். அதில் பிரதீப்பை பற்றி அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்லி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஜெயிலரில் விட்டுப் போன உறவை தொடரும் ரஜினி! தலைவர் 171ல் அதிரடியாக களமிறங்கும் சர்ச்சை நடிகர்

அதிலும் ஐஸு விஷ்ணுவிடம் ‘பிரதீப் நல்ல பையன் தான். இப்படியெல்லாம் சொல்லிருக்க வேண்டாம். நானும் நிக்‌ஷனிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவனும் கேட்கல’ என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தை எடுக்கவில்லை, கமல் சார் தான் எடுத்தார் என்று கமல் மீதே புள்ளிங்கோ குரூப் சொல்லி அனைவர் பார்வையையும் திருப்பிவிட்டார்கள்.

இதனால் கமல் கண்டிப்பாக இதற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என காத்திருக்கிறார்கள். இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னவெனில் பிரதீப் தீபாவளி விருந்தாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி வந்தால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதுதான் ஒரு சந்தோஷமான தீபாவளியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கும் உடம்பை நச்சின்னு காட்டும் மிர்னாளினி!.. 10 நாளைக்கு இது போதும்!..

 

Related Articles

Next Story