
ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோரை வைத்து கோமாளி திரைப்படத்தை இயக்கியவர்தான் பிரதீப் ரங்கநாதன்.. அந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தும் இருப்பார். அந்தப் படம் வெற்றியடையவே அதன்பின் ஒரு கதை எழுதினார்.. மேலும் அந்த படத்தில் அவரை ஹீரோவாக நடிப்பது எனவும் முடிவு செய்தார். கோமாளி படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து அப்படி வெளியான திரைப்படம்தான் லவ் டுடே..
இந்த கால ஜென்சி இளசுகளை கவரும் வகையில் கதை, திரைக்கதை அமைத்திருந்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன், டியூட் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதோடு, இவரின் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெறுகிறது. எனவே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறியிருக்கிறார்..
அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் மீண்டும் தானே ஹீரோவாக நடித்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஒருபக்கம் தன்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வரும் தயாரிப்பாளர்களிடம் 25 கோடி சம்பளம் கேட்கிறாராம் பிரதீப். இதைக்கேட்டு சில தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்களாம். அதேநேரம், அவரின் படங்கள் 100 கோடி வசூலை அள்ளுவதால் அவரை வைத்து படமெடுக்க சில தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.