ப்ரதீப் ரங்கநாதனுக்கு தூண்டில் போட்ட டாப் நடிகர்கள்... முதல் இடத்தினை பிடித்தது இந்த நடிகர் தானாம்...
கோலிவுட்டின் இளம் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதனை தனது அடுத்த படத்தினை இயக்க வேண்டும் என டாப் நடிகர்கள் வரிசை கட்டி இருக்கின்றனர். இதில் ஹிட் நாயகர் தான் ப்ரதீப் படத்தினை முதல் ஆளாக ஓகே செய்திருக்கிறாராம்.
வெற்றி பெற்ற படத்தின் பெயரை வைத்து ஒரு படத்தினை எடுப்பது தற்போது அதிகரிக்க துவங்கி இருக்கிறது. விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் பெயரில் பிரதீப் ரங்கநாதனின் நடித்து வெளிவந்து இருக்கு லவ் டுடே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் நடித்து, இயக்கி வெளிவந்து இருக்கும் படம் லவ் டுடே. இவரின் ஷார்ட் பிலிம் ஒன்றை முழு நீள படமாக எடுத்து வெற்றி கண்டிருக்கிறார். படத்தின் வரவேற்பு அதிகரித்த நிலையில், அதற்கான வசூலும் சக்கை போடு போட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சிலர் ப்ரதீப் ரங்கநாதனிடம் கதை கேட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் கதை சொல்லி இருந்தாலும், தளபதி விஜய் தான் கேட்ட கதையை உடனே ஓகே செய்து விட்டாராம். ஆனால் சில மாற்றங்களையும் சொல்லி இருக்கிறாராம். படத்தின் வெற்றி விழாவிற்கு இடையில் இந்த வேலையிலும் ப்ரதீப் பிஸியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது.