கோமாளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மூன்று வருடங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாற்றியது.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன்பின் அசோக் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார் பிரதீப். அந்த படம் 100 கோடி வசூலைத் தொட்டது. அதேபோல் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்கிற படத்தில் பிரதிப் நடிக்க அந்த படமும் வெற்றி.. இப்படி இயக்குனரக ஒரு வெற்றி, நடிகராக மூன்று தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் பிரதீப்..
இந்நிலையில்தான், தன்னுடைய புதிய பட அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டிருக்கிறார்.. ‘நண்பனாய் இருந்து டைரக்டரா மாறுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது.. இப்போது இரண்டும் என்னிடம் இருக்கிறது.. விரைவில்’ என பதிவிட்டு இரண்டு டிராகன் புகைப்படங்களை வைத்திருக்கிறார்.
இதை பார்க்கும் போது டிராகன் 2 படத்தை அவர் இயக்கி நடிக்கப்போவது தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…