மலையுடன் மோதும் தயாராகும் பிரதீப் ரங்கநாதன்… தேவையா இதெல்லாம்… தப்பிச்சிடுவாரா?
Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் நடிக்க வரும் சில இயக்குனர்களுக்கு தான் நேரம் சரியாக அமையும். அப்படிதான் சமீபத்திய வரவாக பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார். இயக்குனராக அறிமுகமானவர் தற்போது நடிகராக இருக்கும் நிலையில் அவர் அடுத்த படத்துக்கு தற்போது ஒரு சிக்கல் உருவாகி இருக்கிறது.
குறும்படம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். படத்தின் ஒரு பாடலில் ரஜினிகாந்த் மட்டம் தட்டி எழுதப்பட்டிருந்த நிலையில், அது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…
பின்னர் அந்த வரிகள் நீக்கப்பட்டாலும் அது படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் ஆக உதவியது. இதைத்தொடர்ந்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக அப்படம் வெற்றி பெற்றாலும் பிரதீப் ரங்கநாதன் அதற்கு அடுத்த படங்களை இயக்காமல் இருந்தார். பின்னர் அவர் இயக்கத்தில் லவ் டுடே படத்தை உருவாக்கி அதில் அவரை ஹீரோவாகவும் நடித்தார்.
2k கிட்ஸ் என் காதலை மையமாக வைத்து உருவாக்கி இருந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது. ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…
இப்படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளை திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் பிரதீப்புடன் மிஸ்கின், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்போ இந்த படம் சிக்கலில் சிக்க இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரசாந்த் நீல் அடுத்து இயக்க இருக்கும் படத்துக்கும் டிராகன் என்றே பெயர் வைக்கப்பட இருக்கிறதாம். இதனால் இது பிரதீப் படத்துக்கு பின்னடைவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.