ஒரே படம்.. ஓஹோனு வாழ்க்கை!.. ரவுண்ட் கட்டும் கோடம்பாக்கம்!.. அதிரடியான அடுத்த அப்டேட்..
கடந்த வருடம் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் ‘லவ் டுடே’ திரைப்படம். இந்தப் படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருந்தார் இயக்குனர் பிரதீப் ரெங்கநாதன். இந்த படத்திற்கு முன் ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்,
அதனையடுத்து சிறிய பட்ஜெட்டில் தயாரான லவ் டுடே திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவிற்கு பெரிய வசூலை வாரி இறைத்தது. பொன்னியின் செல்வன் படம் வெளியாகி அது ஒரு பக்கம் வசூல் நடைபெற அதனை அடுத்து வந்த இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
அதுவரை நட்சத்திரங்களுக்காகவே படம் வசுலில் அள்ளும் என்ற நிலை மாறி கதைக்காகவே ஓடிய படம் என்ற பெயரை வாங்கியது லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றி பிரதீப் ரெங்கநாதனை எங்கேயோ கொண்டு சென்றது. அடுத்து அடுத்து பல வாய்ப்புகள் வர ஹீரோவாகவே மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனம் அவரை இரண்டு படங்களில் கமிட் செய்திருந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதிலும் பிரதீப் ரெங்கநாதன் இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் ஏகே 62 படம் கைவிட்டு போன நிலையில் விக்னேஷ் சிவனும் தன் அடுத்தப் படத்திற்கு பிரதீப் ரெங்கநாதனை அணுகியிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் கொரானா காலத்தில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்புவை வைத்து ‘கொரானா குமார்’ என்ற படத்தை எடுப்பதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் அது அப்படியே விட்டுப் போக கொரானாவும் காணாமல் போக படம் கிடப்பில் போடப்பட்டது. அதை மறுபடியும் தூசி தட்டி எழுப்பியுள்ளனர். அதே பெயரில் சிம்புவிற்கு பதில் பிரதீப் ரெங்கநாதனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம். எங்கு பார்த்தாலும் இப்பொழுது பிரதீப் ரெங்கநாதன் பேர் தான் அடிபட்டு வருகிறது.
இதையும் படிங்க : யாருமே செய்யாத காரியம்!. திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த ரஜினி..