விடுதலை படமும் பிரதீப் ரெங்கநாதனும்!.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன நடந்தது?..
இளம் இயக்குனர்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்களில் பிரதீப் ரெங்கநாதனும் ஒருவர். ‘கோமாளி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். எடுத்த முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என்ற அளவில் பேசப்பட்டார்.
அதன் பிறகு ‘லவ் டுடே’ படம் அவரே ஆச்சரியப்படும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படம் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிகமாக பேசப்பட்ட படமாக அமைந்தது.
குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை வாரி தந்த படமாக லவ் டுடே அமைந்தது. அந்தப் படத்திற்கு பிறகு எங்கு பார்த்தாலும் பிரதீப் ரெங்கநாதனின் பெயரே ஒலித்தது. சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிற மாதிரி இவர் போற இடங்களில் எல்லாம் பிரதீப்பிற்கு மதிப்பும் மரியாதையும் தானாகவே கிடைத்தது.
இதன் மூலம் அதிகம் தேடப்படும் இயக்குனர் மற்றும் நடிகராக பிரதீப் ரெங்கநாதன் விளங்கினார்.அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் பிரதீப் ரெங்கநாதனை கடந்த இரண்டு நாள்களாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதற்கு பின்னனியில் இருப்பது சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் தான். விடுதலை திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் பிரபலங்களும் அந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதீப் ரெங்கநாதனும் படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விடுதலை படம் தரமான ஒரு தரமான கதையில் வெளிவந்த படமாகும், மேலும் படத்தை எடுத்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு எனது நன்றிகள்’என தனது வாழ்த்து செய்திகளை பகிர்ந்திருந்தார்.
இந்த செய்தியை பகிர்ந்த அடுத்த வினாடியில் இருந்து ரசிகர்கள் பிரதீப்பை தகாத வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். அதற்கு காரணம் வெற்றிமாறனுக்கு பிரதீப் மரியாதை கொடுக்காமல் வெறும் பெயரை மட்டும் உச்சரித்திருப்பது வெற்றிமாறன் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க : இசையை பத்தி என்ன தெரியும்?-பத்திரிக்கையாளரை கண்டபடி கேட்ட இளையராஜா… அப்போவே அப்படித்தான் போல!
சார் என்று குறிப்பிட்டு சொல்லிருக்க வேண்டும் என்றும் இரண்டு படம் மட்டுமே எடுத்த உனக்கு இவ்ளோ திமிரா என்றும் காரசாரமாக சாடி வருகின்றனர்.