More
Read more!
Categories: Cinema News latest news

கோட் படம் விஜய் படமா? செக் வைத்த டாப் ஸ்டார் பிரசாந்த்… அடிக்கடி இப்படியே சொல்றாரே!

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படம் குறித்து சுவாரசிய அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் நேரத்தில் நடிகர் பிரசாந்தின் பேட்டி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த்,  பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் சிங்கள் இந்த வார இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய்யுடன் போட்டி நடிகராக இருந்த நடிகர் பிரஷாந்த் இப்படத்தில் முக்கிய இடம் ஏற்று இருக்கிறார். முன்னதாக அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில் விஜய் படத்தில் நடிப்பது குறித்து கேள்வி கேட்ட போது, ஒன்றாக இணைந்து நடிக்கிறோம் எனக் கூறி இருப்பார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தியேட்டரில் டிக்கெட் கிழித்த குமரேஷன் முதல் ராமராஜன் எம்.பி. வரை!.. சாமானியனின் சாதனை!..

இந்நிலையில் அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், வெங்கட் பிரபு என்னிடம் கதை சொன்ன போது கேட்கவே சுவாரசியமாக இருந்தது. பின்னர் அதில் நடிக்கும் போது நிறைய ஆச்சரியங்களை கொடுத்தது. இதில் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனியான இடம் இருக்கிறது. மல்டி ஸ்டார் படமாக தான் இது உருவாகிறது.

ஆனால் இது விஜய் படம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருந்தும் எங்களுக்கான கதாபாத்திரத்திரம் முக்கியமானதாகவே படத்தில் அமைந்திருக்கிறது. நிறைய அப்டேட்கள் வர இருக்கிறது. ஆனால் இனிமேல் தான் என முடித்துகொண்டார்.

Published by
Akhilan

Recent Posts