ஆரம்பத்தில் பிரசாந்தும், அஜித்தும் இணைந்த படம் கல்லூரி வாசல். அப்போது பிரசாந்துக்கு ஏராளமான ரசிகைகள் உண்டு. டாப் ஸ்டாராக வலம் வந்தார். அவருடன் தான் உலக அழகி ஐஸ்வர்யாராயே ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த வகையில் அஜித் நடித்த ஒரு ஹிட்டான படத்தில் முதலில் பிரசாந்தைத்தான் கேட்டார்களாம். ஆனால் அது மிஸ் ஆனது எப்படின்னு பார்க்கலாமா…
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் மம்முட்டியும் நடிப்பதாக இல்லை. அஜித்தும் நடிப்பதாக இல்லை. மம்முட்டியோட கதாபாத்திரத்துக்கு முதலில் பார்த்திபனைத் தேர்ந்தெடுத்தார்களாம். அவர் நடிக்க முடியாத சூழலில் அர்ஜூனை நாடினார்கள். அவரும் நடிக்க முடியாத சூழல். அதுக்குப் பிறகு தான் அந்தக் கதாபாத்திரத்திலே நடிக்க மம்முட்டியை ஒப்பந்தம் செய்தனர்.
அதே மாதிரி தான் அஜித் கதாபாத்திரத்தில் முதலில் பிரசாந்தைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். பிரசாந்தைப் பொருத்தவரைக்கும் அதற்கு முன் ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்தார். அதனால இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கணும்னு நினைத்தார். ஆனால் கதாபாத்திரம் அப்படி அமையாததனால அவரு அந்தப் படத்துல இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதற்குப் பிறகுதான் அஜித் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் படத்தைப் பொருத்தவரை மம்முட்டி, அஜித் ரெண்டு பேரும் நல்ல பழகினாலும் மிகப்பெரிய நட்பு அவங்களுக்குள்ள அந்தப் படத்துல இருந்ததாக சொல்ல முடியாது.
2000த்தில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யாராய், தபு, அப்பாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர். குறிப்பாக அஜித்தின் என்ன சொல்லப் போகிறாய் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.