Categories: Cinema News latest news

சரக்கு அடிச்சுட்டுத்தான் ஸ்டோரியே எழுதுவேன்! அதான் படம் அப்படி இருக்கு – காரித் துப்பிய ரசிகர்கள்

Salaar Movie: சில தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான திரைப்படம் சலார். கே.ஜி.எஃப் என்ற மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கையோடு பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கிய படம்தான் சலார் 1. ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத்தான் தரும் என்பதற்கு உதாரணமாக விளங்கியது சலார்.

இந்தப் படத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ் மற்றும் சுருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி முதல் நாள் காட்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க சென்றனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதுதான் பல பேரின் கருத்து.

இதையும் படிங்க:அஜித் நோ சொன்னா நோ தான்! மகிழ்திருமேனியை விரட்டும் தல – இது என்ன கொடுமை

சுருதிஹாசனின் நடிப்பு படத்தில்  மிக நன்றாக இருந்தது என்றெல்லாம் கூறினார்கள். மேலும் ஒரு பேட்டியில் பிரம்மாண்ட இயக்குனரான ராஜ மௌலி கூட சுருதிஹாசனின் டான்ஸுக்கு நான் அடிமை என்றும் ஆனால் சலார் படத்தில் சுருதிக்கு ஒரு டூயட் பாடல் கூட இல்லை என்பது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படம் இந்தளவுக்கு விமர்சனம் ஆனதற்கு காரணம் பிரசாந்த் நீல்தான் என்று சொல்லப்படுகிறது.அதாவது பிரசாந்த் நீல் முன்பு ஒரு பேட்டியில் எனக்கு சரக்கு அடித்தால்தான் ஸ்டோரியே எழுத வரும் என்ற சர்ச்சைக்குண்டான கருத்தை கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?

ரசிகர்கள் இப்போது இதை வைரலாக்கி வருகின்றனர். இந்த மாதிரி எதாவது செய்திருப்பார். அதனால்தான் படம் இந்தளவு மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது என்றும் கூறிவருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி விதார்த் நடிப்பில் 1000 பொற்காசுகள் என்ற படம் ரிலீஸானது,

அந்தப் படம் மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருவதால் சலார் படத்தின் ஸ்கிரீனிங்கை குறைத்து விதார்த் படத்தின் ஸ்கிரீனிங்கை அதிகரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: 138 தியேட்டர் கொடுக்கிறேனு சொல்லிட்டு ஒரு தியேட்டர் கூட கொடுக்கல! 60 லட்சம் வேஸ்ட் – இந்தப் படத்திற்கா?

Published by
Rohini