தனது மூன்று படங்களை தெலுங்கு சினிமா காப்பியடித்து படங்களை பண்ணியதாக சுந்தர் சி வெளிப்படையாக சமீபத்திய பேட்டியில் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து பேசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரம் சுந்தர் சி வின்னர் படத்தை எப்படி எல்லாம் திருடி எடுத்தார் என்பதையும் போட்டு உடைத்து விட்டார்.
அருணாச்சலம், அன்பே சிவம், உள்ளத்தை அள்ளித்தா என ஆரம்பத்திலேயே பல சிக்சர்களை சுந்தர் சி அடித்திருந்தார். ஆனால், கமல்ஹாசன், மாதவன் மற்றும் கிரண் நடிப்பில் வெளியான அன்பே சிவம் அவருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. அந்தப் படத்தை பல ஆண்டுகள் கழித்து ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
இதையும் படிங்க: த்ரிஷா நடிச்சு கண்டுக்கல.. அசால்ட்டா நடிச்சு பேர் வாங்கிய நயன்! என்ன மேட்டர் தெரியுமா?
அன்பே சிவம் தோல்விக்குப் பிறகு மீண்டும் காமெடி படங்களையே அதிக அளவில் இயக்க ஆரம்பித்தார் சுந்தர் சி. கலகலப்பு, அரண்மனை சீரிஸ் படங்களை தற்போது எடுத்து வருகிறார். தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4ம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பிரசாந்தை அழைத்துக் கொண்டு தற்போது சுந்தர் சி நடத்திய பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் வெளிப்படையாக தெலுங்கு படங்களை சுட்டுத்தான் எப்படி படங்களை எடுத்தேன் என்பதை சுந்தர் சி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எங்களால வளர்ந்தவரு வைரமுத்து!.. அவர் ஒரு நல்ல மனுஷனே கிடையாது!.. பொங்கிய இளையராஜா தம்பி!..
தன்னுடைய மூன்று படங்களையும் காப்பியடித்து தெலுங்கில் படங்கள் உருவாகியதாகவும், அதற்கு பழிவாங்க தெலுங்கு படங்களை காப்பி அடித்துதான் வின்னர் படத்தை உருவாக்கினேன் சுந்தர் சி கூறியுள்ளார்.
உடனடியாக பேசிய பிரசாந்த் வின்னர் படத்தின் முதல் பாதிக்கு ஐந்து தெலுங்கு படங்களின் டிவிடிக்களும் இரண்டாம் பாதிக்கு ஐந்து தெலுங்கு படங்களின் டிவிடிக்களையும் கொடுத்து இதை வைத்து தான் படம் பண்ண போகிறோம் என்றார் சுந்தர் சி என வின்னர் படம் எப்படி திருடப்பட்டு எடுக்கப்பட்டது என்பதை போட்டு உடைத்து விட்டார் பிரசாந்த்.
இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…