விஜயை தொடர்ந்து அந்த ஹீரோவுடன் நடிக்கும் பிரசாந்த்?!.. அப்ப இனிமே ஹீரோ இல்லையா?!...

by sankaran v |   ( Updated:2024-09-09 20:29:22  )
v p
X

v p

பிரசாந்த் கடைசியாக விஜய் உடன் இணைந்து நடித்த கோட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது. இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவரது தந்தை தான் அவரை ஆரம்பத்தில் இருந்தே பார்த்து பார்த்து அவரது சினிமா கேரியரை செதுக்கியவர். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகனுக்காக அவர் இயக்கிய அந்தகன் படமும் பெரும் வெற்றியைப் பெற்று பிரசாந்துக்குக் கம்பேக்கைக் கொடுத்தது. அவரது தந்தை பெரிய ஜோதிடர் என்று அந்தணன் தெரிவித்து இருந்தார். பிரசாந்துக்காக ஜாதகம் பார்த்து கணித்துள்ளாராம்.

அதன்படி இந்த ஆண்டு முதல் அவருக்கு நல்ல ஹைப் இருக்குதாம். அதனால் தான் அந்தகன் படத்தை இந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்துள்ளார்.

surya 44

surya 44

அதன்படி கோட் படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி பார்க்கப் போனால் தந்தையின் கணிப்பு சரியாகவே இருக்கிறது.

அவரது கணக்கின்படி பிரசாந்துக்குப் புதுப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளன. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜூம் நடிக்க உள்ளாராம். மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோட் படத்தில் பிரசாந்த் கேமியோ ரோல் பண்ணியதாக வலைப்பேச்சு சக்திவேல் சொல்லவும் வலைப்பேச்சு பிஸ்மி கேமியோ கிடையாதுன்னு இழுத்தார். உடனே சக்திவேல் சுதாரித்துக் கொண்டு எக்ஸ்டண்ட்டடு கேமியோ என சொல்லி சமாளித்தார் சக்திவேல்.

சக்திவேல் சூர்யா 44 படத்தைப் பற்றி சொல்லும்போதே பிஸ்மி சீக்கிரம் பேரை வைக்கச்சொல்லுப்பான்னு அலுத்துக் கொண்டது சுவாரசியமாக இருந்தது. படத்திற்கான செட் சென்னையில் நடந்து கொண்டு இருக்கிறதாம். சூர்யா கூட நடிக்கப் போறாரு. இனிமேலாவது அவரை ஜிம்முக்குப் போகச் சொல்லுங்க என பிஸ்மி சொன்னது ஹைலைட்.

Also read: எந்தப் படமும் தொடாத சாதனையை செய்த ‘கோட்’! தளபதி நீங்களா சினிமாவ விட்டு போறீங்க?

படத்தில் முக்கிய கேரக்டர்கள் அதாவது சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பிரசாந்த் உள்பட பலர் நடிக்க உள்ளதாலும் ரஜினியின் பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Next Story