ஏஆர் ரஹ்மானால் என் கெரியரே போச்சு! இளையராஜா பிரச்சினையை விட பெருசா இருக்கும் போலயே
AR Rahman: இப்போது கோலிவுட்டில் பெரும் பிரச்சனையாக இருப்பது இளையராஜா அவருடைய இசையை அவர் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என்பதை பற்றிய ஒரு பிரச்சனை தான். சமீபத்தில் 'கூலி' படத்தில் அவருடைய இசையை பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார் இளையராஜா. அது சம்பந்தமான வழக்கு தான் இப்போது போய்க் கொண்டிருக்கின்றது.
இதைப்பற்றி ஒரு சில பேர் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனர் ஆன பிரவீன் காந்தி இளையராஜா செய்வதில் என்ன தவறு என்பது மாதிரி அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். ரட்சகன், ஜோடி போன்ற படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. இவர் இளையராஜா பற்றி பேசும்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…
அதாவது என்னுடைய வாழ்க்கை பெரிதாக போகாததற்கு காரணம் ஏ ஆர் ரகுமான் என கூறி ஷாக் கொடுத்திருக்கிறார். அதாவது ரட்சகன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது விஷுவலாக பார்க்கும்போது ஒரு ஹிந்தி படத்தை பார்த்த உணர்வு இருக்கும்.மேக்கப்பில் இருந்து படத்தின் விஷுவல் அனைத்துமே ஹிந்தி லுக்கில்தான் இருக்கும். மேலும் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய இருந்தாராம்.
அதனால் ஹிந்தியில் இந்த படத்தால் தனக்கு பெரிதளவு மார்க்கெட் இருக்கும் என நினைத்தாராம் பிரவீன் காந்தி. ஆனால் அதை சுக்கு நூறாக உடைத்து விட்டாராம் ஏ ஆர் ரகுமான். ஏனெனில் இந்த படத்தின் பாடல் ஹிந்தி ரைட்ஸ் ஏ ஆர் ரகுமானிடம் இருந்ததாம். அவர் ஒரு உச்சத்தில் போகும் போது ரைட்ஸும் அவரிடமே போய் விடுகின்றன. அவரை மீறி எதுவும் பண்ண முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி விடுகிறது.
இதையும் படிங்க: அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?
அந்த நேரத்தில் ஹிந்தியில் ரகுமான் ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கும் ரகுமானுக்கும் இடையே அப்போது ஒரு சின்ன மனக்கசப்பு உருவானதாகவும் ரகுமான் ஹிந்தியில் ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லிவிட்டதாகவும் பிரவீன் காந்தி கூறினார். அதுவும் அந்த நேரத்தில் ரகுமான் மிகவும் உச்சத்தில் இருந்ததனால் ரைட்ஸ் பற்றி அவரிடம் எதுவுமே பேச முடியாத ஒரு சூழல், ஒரு வேளை ஹிந்தியில் ரிலீஸ் செய்திருந்தால் நான் அடுத்தடுத்து பல படங்களை ஹிந்தியில் எடுத்து இருப்பேன். இப்பொழுது அட்லி எந்த லெவலுக்கு போயிருக்கிறாரோ அதே மாதிரியான ஒரு லெவெலில் நானும் சென்று இருப்பேன் என பிரவீன் காந்தி கூறினார்.