விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு?!. வீடியோ வெளியிட்ட பிரேமலதா!..
Vijayakanth: மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டு வாய்ப்பை பெற்று ஹீரோவாக நடிக்க துவங்கி படிப்படியாக வளர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களில் சமுதாய அவலங்கள் பற்றியும் பேசிவந்தார்.
இயற்கையாகவே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. தேமுதிக என்கிற கட்சியை துவங்கி தீவிர அரசியலில் இறங்கினார். சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
இதையும் படிங்க: கிள்ளிக் கொடுத்த ஷாருக்கான்!.. அள்ளிக் கொடுத்த அன்னபூரணி!.. நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?..
எழுந்து நடக்க முடியாமலும், பேச முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணர முடியாதவராய் அவர் இருக்கிறார். அவரை பல சினிமா பிரபலங்கள் சந்திக்க ஆசைப்பட்டும் பிரேமலதா அவற்றை தவிர்த்து வருகிறார். இந்நிலையில்தான், சமீபத்தில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இரண்டு வாரங்கள் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் நிறுவனம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி பல வதந்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘கேப்டன் நன்றாக இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்ள நான் இருக்கிறேன். விரைவில் அவர் நலம் பெற்று வருவார். அதுவரை தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என அதில் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘ஜோ’… 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…